districts

img

மேற்கு மாவட்டங்களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்

நீலகிரி மக்களவை தொகுதி

பெயர்: ஆ.ராசா
வயது: 61
கல்வி: பிஎஸ்சி மற்றும் முதுகலை சட்டம்
பெற்றோர்: எஸ்.கே.ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை
மனைவி: பரமேஸ்வரி (இறந்து
விட்டார்)
மகள்: மயூரி
கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம்
பொறுப்பு: மாநில துணை பொதுச்
செயலாளர்
மக்கள் பணி:
இவர் முதன் முதலாக பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார் பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 11 ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பின ராக தேர்வானார். பின்னர் 1999 இல் நடை பெற்ற 13 ஆவது மக்களவையில் பெரம் பலுார் தொகுதியில் வெற்றி பெற்று, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரானார். 2003 ஆம் ஆண்டு வரை ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச் சராகவும் பதவி வகித்தார். 2004 ஆம்  ஆண்டு நடைபெற்ற 14 ஆவது மக்களவை  தேர்தலில் பெரம்பலூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 - 2007 ஆண்டு வரை ஒன்றிய சுற்றுச்சூழல் துறை  அமைச்சராகவும், பின்னர் 2007 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றிய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக 2009 வரை பொறுப்பு வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடை பெற்ற 15 ஆவது மக்களவைக்கான தேர்த லில் தி.மு.க சார்பில் நீலகிரி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் ஒன்றிய தொலைத்தொ டர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

கோவை மக்களவை தொகுதி

பெயர்: கணபதி ப. ராஜ்குமார் வயது: 59 தந்தை: பழனிசாமி  கல்வித்தகுதி: எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு: திமுக கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவர் மக்கள் பணி: எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். 2014 ம் ஆண்டு முதல் 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார். 

சேலம் மக்களவை தொகுதி

பெயர்: டி.எம்.செல்வகணபதி வயது: 65 கல்வி: எம்ஏ, எல்எல்பி பெற்றோர்: டி.எம்.முத்துசாமி – அழகம்மாள் மனைவி: பாப்பு செல்வகணபதி மகன்கள்: அரவிந்த், அஸ்வின் கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு: சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் மக்கள் பணி:  1991 ஆண்டு திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக போட்டி யிட்டு வெற்றி பெற்று, உள்ளாட்சித் துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக செயல் பட்டார். 1999 - 2004 காலகட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2010 - 2014 ஆம் ஆண்டு திமுக மாநி லங்களவை உறுப்பினராக தேர்வு செய் யப்பட்டார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி

பெயர்: கே.ஈஸ்வரசாமி
வயது: 47
பெற்றோர்: கருப்புசாமி - வேலாத்தாள்
கல்வி: 10 ஆம் வகுப்பு
மனைவி: லதாபிரியா ஈஸ்வரசாமி மகள்: ஈ.ஹரிவர்ஷா அரசியல் பணி : 2007-ல் மடத்துக் குளம் ஒன்றிய பிரதிநிதி, 2014-ல் ஒன்றி யக் கழகப் பொருளாளர்,  2020-ல் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர், 2022 ல் கழக  அமைப்பு தேர்தலில் ஒன்றிய செயலா ளர். மக்கள் பணி: 2019-ல் ஒன்றியக்குழு உறுப்பினர், 2019-ல் ஒன்றியக்குழு துணைத்தலைவர்.

ஈரோடு மக்களவை தொகுதி

பெயர்: கே.இ.பிரகாஷ்
வயது: 48
கல்வி: இளங்கலை - பொருளாதாரம்
தந்தை: கே.எஸ்.ஈஸ்வரமூர்த்தி
மனைவி: பி.கோகிலா
மகள்: கன்யா, மகன்: இனியன் 
கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம்
பொறுப்பு: இளைஞரணி மாநில துணைச்செயலாளர்
அரசியல் பணி:
இவரது தந்தை 1967 ஆம் ஆண்டு முதல் திமுக நிர்வாகியாக இருப்பதால், தன்னையும் கட்சியில் இணைத்து கொண்டு அரசியல் பணியாற்றி வருகிறார். மேலும், தனது மனைவியையும் கட்சியில் இணைத்து செயல்பட்டு வருகிறார். தற்போது இவரது மனைவி மொடக்குறிச்சி கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மக்களவை தொகுதி

பெயர்: ஆ.மணி
வயது: 55
கல்வி: பி.காம், பி.எல்
தந்தை: ஆரிமுத்து
கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம்
பொறுப்பு: தருமபுரி மேற்கு மாவட்ட துணைச்செயலாளர்
தேர்தலில் போட்டி:
 

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 88,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்றும் தோல்வியடைந்தார். 2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

நாமக்கல் மக்களவை தொகுதி

பெயர்: எஸ்.சூரியமூர்த்தி
வயது: 51
கல்வி: பி.ஏ
பெற்றோர்: எஸ்.செங்கோட்டையன் – பார்வதி
மனைவி: பத்மாவதி
மகன்கள்: ஹரிஷ், பொன்வருண்
கட்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
பொறுப்பு: தலைமை நிலையச் செயலாளர், மாநில இளைஞரணி செயலாளர்.