தருமபுரி நகராட்சி, 16 ஆவது வார்டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.கிரைஸாமேரி, திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, நகரச் செயலாளர் மே.அன்பழகன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கோரினார். இதில், மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.