districts

img

வாட்டி வதைக்கும் கோடை வெயில் சூடு பிடிக்கும் மண் பானை விற்பனை

கோவை மாநகரை கடந்த  சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் தொடங்க இன் னும் பல வாரங்கள் உள்ள நிலையில், கோவையில் தற் போதே 95 டிகிரி பாரன்ஹீட் அள விற்கு வெப்பம் பதிவாகி வரு கிறது. இதனால் கோவையில் வறண்ட வானிலை நிலவுவ தால் வாகன ஓட்டிகள் அவதி யடைந்து வருகின்றனர். தாக்கும் வெயிலில்  இருந்து தப்பிக்க பொது மக்கள் இளநீர், நுங்கு, தர்பூ சணி உள்ளிட்டவற்றை அதிக மாக சாப்பிடுகின்றனர். மேலும். ஜூஸ் வகைகள், பத னீர் உள்ளிட்டவற்றை வாங்கி குடிக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து உள் ளதை தொடர்ந்து கோவை யில் மண்பானை விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஒரு மண்பானை ரூ.250 முதல் ரூ.850 வரை விற்பனை செய் யப்படுகிறது.  கோவை - மேட்டுப்பாளை யம் சாலையில் பல்வேறு இடங் களில் மண்பானைகள் விற் பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு தண் ணீர் கேனை நேரடியாக கவிழ்த்தி வைத்து பயன்படுத் தும் வகையிலான ஜாடி  மண்பானைகள் தயாரிக்கப் பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள் ளது. கடந்த இரண்டு ஆண்டு களாகவே அவை சந்தையில் இருந்தாலும், இந்த ஆண்டு இவ்வகை மண் பானைகளை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்ற னர். அதேபோல மண்ணால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்  மற்றும் சிறியது முதல் பெரிய  வகையான மண்பானைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மண்பானை வியாபாரி  கூறுகையில், கோவையில் கோடை வெயி லின் தாக்கம் அதிகமாக உள் ளது. இதன்காரணமாக கடந்த  10 நாட்களாக மண் பானை கள் வாங்க அதிகளவு வாடிக்கையாளர்கள் வரத் துவங்கி உள்ளனர். குறிப்பாக நேரடியாக தண்ணீர் கேனை கவிழ்த்தி வைக்கும், ஜாடி வடிவிலான மண் பானை செய்யப்பட்டு உள்ளது. இது மற்ற பானைகளை விட கூடு தல் மண் போட்டு தயாரிக்கப் படுகிறது. அதனால் அதிக  பாரம் தாங்கும், தற்போது மண்  பானைகள் வாங்க அதிகளவு வாடிக்கையாளர்கள் வரு கின்றனர். பானை தயாரிக்க  முடியாத அளவிற்கு ஆர்டர்கள் உள்ளது. இருப்பினும் களி மண்ணுக்கான தட்டுப்பாடு தான் தொடர்ந்து வருகிறது. மண் எடுக்க பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருக்க அரசு வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என தெரி வித்தார். கோவையில் கோடை காலம் துவங்குவதற்கு முன்ன தாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக மண் பானை களை வாங்க வாடிக்கையா ளர்கள் வரத்துங்கியுள்ளனர். தற்போது தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள் ளிட்ட பயன்பாட்டுக்காக பானைகள் வாங்கி வரும் நிலையில், இன்னும் வரும்  காலங்களில் மண் பானைக ளின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. -கவி