districts

சாலை, மின்விளக்கு, சாக்கடை வசதி செய்து தருக!

குளித்தலை மக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு

குளித்தலை, ஜன.22- குளித்தலை பெரியார் நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து குளித் தலை நகராட்சி ஆணையர் (பொ) புகழேந்தியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதா வது:  குளித்தலை பெரியார் நகர் பகுதி உருவாகி 20 ஆண்டு களுக்கு மேலாகியும் இதுவரை இப்பகுதியில் கழிவுநீரை வெளி யேற்ற சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் ஒவ் வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டு கழிவுநீர் சேக ரிக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற் றும் வாகனம் மூலம் சேகரிக்கப் பட்டு வருகிறது. ஆனால், கழிவு நீர் அப்புறப்படுத்தும் வாகனம் முறையாக வராத காரணத்தி னால் கழிவுநீர் சாலையில் வழிந் தோடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே, தினந்தோறும் கழிவு நீர் அகற்றும் வாகனம் வருவ தற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும். பெரியார் நகர் பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த விரை வில் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

மைதானத்தில் குப்பைகள்

குளித்தலை பெரியார் நக ரின் வடகிழக்கு பகுதியில் நக ராட்சிக்கு சொந்தமான இடத்தை தூய்மை செய்து அதனை இளைஞர்கள், சிறுவர்கள் விளை யாட்டு மைதானமாக பயன் படுத்தி வந்தனர். தற்போது இந்த மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எடுத்து செல்லப் படுகிறது. இந்த மைதானம் முழு வதும் நெகிழி பைகள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து காணப்படு கிறது. இதனால் துர்நாற்றம் வீசு வதோடு தெரு நாய்களின் தொல் லையும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில் உள்ள சில குழ ந்தைகளையும், பெரியவர்களை யும் நாய்கள் கடித்துள்ளன. எனவே, இந்த மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத் தம் செய்து தரவேண்டும். வெறி நாய்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களை காக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ள னர்.

பழுதடைந்த சாலை

இதேபோல, தமிழ்நாடு இளை ஞர் கட்சியின் நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வ லர்கள் அளித்த மனுவில், குளித்த லையில் கடம்பவனேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. குளித்தலையில் இருந்து புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் முக்கியமான இணை ப்பு சாலையாக உள்ள இச்சாலை வழியாக ஆம்புலன்ஸ் முதல் தினந்தோறும் நூற்றுக்கணக் கான வாகனங்கள் சென்று வரு கின்றன. பழுதடைந்த இந்த சாலை யை சீரமைக்க வலியுறுத்தி பல முறை நகராட்சி நிர்வாகத்தி டம் தெரிவித்தும் எந்தவித நட வடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் ஜன.27 அன்று வாழைக் கன்றுகள் நடும் போராட்டம் நடத் தப்படவுள்ளது என கூறியிருந்த னர்.

தீப்பந்தத்துடன் போராட்டம்

குளித்தலை பகுதி மாண வர்கள்-இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை நக ராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளித்தலை ரயில்வே கேட் முதல் கோட்டைமேடு வாய்க்கால் பாலம் வரை உள்ள சாலையில் மின்விளக்கு அமைக்க நட வடிக்கை எடுக்கக்கோரி நக ராட்சியில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை மின் விளக்குகள் அமைக்கப்பட வில்லை. ஜன.27 அன்று மாலை 6 மணி முதல் குளித்தலை - மணப்பாறை சாலையில் தீப் பந்தம் ஏந்தி போராட்டம் நடத் தப்படும் என கூறப்பட்டிருந்தது.  மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் கூறினார்.

 

;