districts

img

நூல் விலை உயர்வு: விசைத்தறி தொழிலை பாதுகாத்திடுக பஞ்சாலை, விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம், ஜூன் 15- நூல் விலையை குறைத்து விசைத்தறி தொழிலை பாதுகாத்திட கோரி பஞ்சாலை மற்றும் விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் சார் பில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் நால் ரோடு பகுதியில்  புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஜூன்  15-ல் நடைபெறும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாலை விசைத்தறி தொழிலா ளர்களின் அகில இந்திய ஒருங் கிணைப்புக் குழு உறுப்பினர் எம். அசோகன் தலைமை தாங்கினார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் ந. வேலுசாமி சிறப்புரையாற்றினார்.  இதில், விசைத்தறி பஞ்சாலை உள்ளிட்ட தொழிலில் பணிபுரியும் ஜவுளித் தொழிலாளருக்கு 8 மணி நேர வேலை, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம், 60 வயதினருக்கு ரூ.9000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பஞ்சு நூல் விலையை  கட்டுப்படுத்தி, நூல் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில், பாஞ்சாலை, விசைத்தறி சங்க நிர்வாகிகள் கே.மோகன், ஏ. அசன், எம்.அங்கமுத்து மற்றும் சிபிஎம் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, வாலிபர் சங்க  செயலாளர் லட்சுமணன், சிஐடியு சங்க முன்னணி நிர்வாகிகள் கே. குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு
இதேபோன்று, திருச்செங் கோடு அருகே குமரமங்கலத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விசைத்தறி மற்றும் ஜவுளி தொழில்கள் நாமக் கல் மாவட்டத்தில் பிரதான தொழி லாக உள்ளது.இத்தொழில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இத் தொழிலுக்கு மூலாதாரமாக விளங் கும் பஞ்சு மற்றும் நூல் விலை வர லாறு காணாத அளவில் விலை  உயர்ந்து கொண்டே வருவதால் ஜவுளி தொழில்கள் செய்ய முடியா மல் திணறிவருகின்றனர். நூல் ஏற்று மதியை தடுத்து நிறுத்த வேண்டும். பருத்தி நூல் பதுக்கலை தடுத்து  நிறுத்திட வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுகளின் குடும்பங்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண் டும். தமிழக அரசு மாவட்டதோறும் நூல் வங்கிகளை அமைத்து மானிய விலையில் விசைத்தறிகளுக்கு நூல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிம் ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சு.சுரேஷ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம், செம்பாம் பாளையம் கிளை செயலாளர் எஸ். லட்சுமி, வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் சக்திவேல் ஆகியோர் கண் டன உரையாற்றினர். இதில் ஏராள மானோர் பங்கேற்றனர்.