மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு மாவட்டக்குழு அலுவலகம் ஞாயிறன்று (இன்று) திறக்கப்பட உள்ள நிலையில், சனியன்று மாலை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, பிரகாஷ் எம்.பி., உள்ளிட்ட திமுக தலைவர்கள், வருகை தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.