தருமபுரி, பிப்.26- பட்டாசு ஆலை விபத் தில் உயிரிழந்த 3 பெண்க ளின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சத்திற்கான காசோ லையை தருமபுரி ஆட்சி யர் சதீஸ் வழங்கினார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத் திலுள்ள தனியார் பட் டாசு ஆலையில் எதிர்பாரா தவிதமாக ஏற்பட்ட வெடி விபத் தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங் கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. அதில், வெடி விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தி னர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலை யினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் வழங்கி னார். மேலும், இவ்விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிக ளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். இதுபேன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது, என ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.