districts

img

வேளாண்மை பல்கலை.,யில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

கோவை, டிச.2- கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மண்டல அளவிலான விளை யாட்டு போட்டிகள் வெள்ளியன்று துவங்கியது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் டிச.2 ஆம்  தேதி முதல் டிச.14 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளன. நான்கு மண்டலங்களிலிருந்து சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆண்டுதோறும் நடை பெற்று வரும் இவ்விளையாட்டுப் போட்டி களில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு பெற்று வருகின்றனர். இந்நிகழ்வின் தொடக்க விழாவினை வெள்ளியன்று பல்கலைக்கழக விளை யாட்டரங்கில் பல்கலைக் கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி, தேசிய மற்றும்  பல்கலைக்கழக கொடி களை ஏற்றியும், ஒலிம்பிக் விளக்கை ஏற்றியும் துவக்கி  வைத்தார்.இதைத்தொடர்ந்து ஒவ் வொரு கல்லூரி விளையாட்டுச் செயலாரின்  தலைமையில் விளையாட்டு வீரர்கள்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதல் மண்டலமான 10 கல்லூரி களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் வெள்ளியன்று துவங்கியது. இதில், 920  பேர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருகை புரிந்துள்ளனர். 10 வகை யான உட்புற மற்றும் வெளிப்புற விளை யாட்டுகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், முனைவர் ந.மரகதம், விளையாட்டுத்துறை உதவி இயக்குநர் டாக்டர் ஜே.பி.தேசிக ஸ்ரீநிவாசன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

;