districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உதகை, மார்ச் 25- குன்னூரில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள்  வேதனை அடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டம், குன்னூர், வண்டிச்சோலை ஊராட்சிக் குட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 20 வருடங்களாக சாலை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு  அந்த சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. ஆனால்,  அன்று தரமில்லாத சாலை போடப்பட்டதால் சாலையில்  உள்ள கற்கள் அனைத்தும் மழைநீரீல் அடித்து செல்லப்பட் டது. இதனால் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு  கூட சாலை  இல்லை. சாலை சீரமைப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த சாலை  சீரமைக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சாலையை விரைந்து  சீரமைத்து தர வேண்டும் என வண்டிச்சோலை ஊராட்சி தலை வர் மஞ்சுளா சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி, மார்ச் 25- பொள்ளாச்சியில் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் திரளா னோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி காவலர் திருமண மண்டலத்தில் சமூக பாது காப்புத் துறை சார்பில் பொள்ளாச்சி வருவாய் கோட்ட அளவி லான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடை பெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா முகாமில் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று துறைவாரியாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இதில்  ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்டு, மருத்துவ சிகிச்சை, உதவித் தொகை, காது கேட்கும் கருவி, அடையாள அட்டை கோரி விண் ணப்பித்தனர். மேலும், முகாமை ஒட்டி நடைபெற்ற மருத்துவ முகாமில் உடல் குறைபாடு குறித்து கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டது.

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 3 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

உதகை, மார்ச் 25- பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தோட்டக்கலை பண்ணை பூங்கா ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு உதகை மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வந்த முதல்வர் மு.க.ஸ்டா லினிடம் பூங்கா ஊழியர்கள் கோரிக்கை மனு  அளித்தனர். அதற்கு ஒரு மாதத்தில் தீர்வு  காணப்படும் என உறுதியளித்தார். இதனி டையே, கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு தீர் வும் காணப்படாததை கண்டித்தும், பணி  நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 500க்கும் மேற் பட்ட தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மூன் றாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங் காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தால், அனைத்து பூங்காக்களிலும் கோடை சீசனுக்கான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சேலம், மார்ச் 25- கொங்கணாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட் பட்ட, வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம்பட்டியை அடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (40) என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதியன்று பட்டாசுகள் மற்றும் வெடி  மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது. இவ்விபத்தில்  அங்கு பணியில் இருந்த சன்னியாசி கடை பகுதியைச் சேர்ந்த  அமுதா (45) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வெள் ளாளபுரம், வாணகார தெருவைச் சேர்ந்த வேடப்பன் (75) என்ப வர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், வேடப்பன் சனியன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி  விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. போதிய  பாதுகாப்பு சாதனங்களின்றி, விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டதாக, சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

தண்ணீர் தினம்

தருமபுரி, மார்ச் 25- உலக தண்ணீர் தினத்தை யொட்டி, அரூர் பேரூராட்சி  சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரூர்  பேரூராட்சிக்குட்பட்ட பல் வேறு இடங்களில் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங் கள் வழங்கியும், பதாகைகள் ஏந்தி சென்றும் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. இதில், செயல் அலுவலர் கலைராணி, பேரூ ராட்சி தலைவர் இந்திராணி தனபால், துணைத்தலைவர் சூர்யா தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்போக்கு அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

திருப்பூர், மார்ச் 25- மார்க்சிய, பெரியாரிய மற்றும் அம்பேத்கர் அமைப்புக ளின் சார்பில்  மார்ச்  23  ஆம் தேதி அவிநாசி புதிய பேருந்து நிலை யம் அருகில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  காவல்துறை அனுமதி அளிக்க மறுத்ததற்கு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  வெளியிடப்பட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது,  உபி மாநிலம் ஹத்ராஸில்  தலித் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மூவரை  விடுதலை செய்தும், ஒருவருக்கு பெயர் அளவிற்கு தண் டனை வழங்கியுள்ளது. ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பட்நா யக் இழிவுபடுத்தும் நோக்கில்லாமல் சாதிப் பெயரைச் சொல்லி திட்டினால் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்ய  வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்துள்ளார். தமிழ்நாட்டில்  திருச்சி குமாரவயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர் அல்லாத இரண்டு அர்ச்சகர்களை நியமித்தது செல்லாது என  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. விளிம்பு  நிலை மக்களின் கடைசி புகலிடமான நீதிமன்றங்களை பட்டிய லின மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதை  கண்டித்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் அவிநாசி  காவல்துறை நடக்கக்கூடாது என்று தடுக்கிறது. ஜனநாயகத் தின் குரல்வளையை நசுக்க முனையும் அவிநாசி காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

போதை பொருட்கள் ஒழிப்பு   விழிப்புணர்வு  பேரணி

தாராபுரம், மார்ச் 25 – தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு மற்றும் தாராபுரம் அரசு  கலைக்கல்லூரி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணி நடை நடைபெற்றது. தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு மற்றும் தாராபுரம் அரசு  கலைக்கல்லூரி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. தாராபுரம் வட்ட சட்ட பணிக் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்ம பிரபு கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி பூங்கா சாலை வழி யாக வட்டாட்சியர் அலுவலகம், சர்ச் ரோடு, பூக்கடை கார்னர் சென்று பிறகு நீதிமன்ற வளாகத்தில் முடிவடைந்தது. இப் பேரணியின் போது கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்கு போதை பொருட் கள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி எம்.தர்மபிரபு கூறுகையில், போதை பொருட்கள் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் புற்று நோய் போல பரவி வருகிறது. இன்றைய கலாசாரம்  பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் போதை எனும் பொரு ளுக்கு இளைஞர்கள் நாளுக்கு நாள் அடிமையாகி வருவது  வேதனையாக உள்ளது. இதனை தடுக்க அரசுடன் தனியார் மற் றும் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இதனை ஒழிக்க பாடு பட வேண்டும், என்றார். இதில், 3 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன்,  குற்றவியல் நடுவர் எஸ்.பாபு,  கல்லூரி முதல்வர் பத்மாவதி,  தாராபுரம்  வழக்கறிஞர் சங்க தலைவர் கலைச்செழியன், செய லாளர் எம்.ராஜேந்திரன், பொருளாளர் வாரணாசை, காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கல் லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கேஸ் கசிவு: விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறை

அவிநாசி, மார்ச் 25- அவிநாசி புதிய பேருந்து நிலைய  வளாகத்தில் உள்ள தேநீர் கடையில்  ஏற்பட்ட கேஸ் கசிவில், விரைந்து செயல் பட்ட தீயணைப்பு துறையால்  பெரும் விபத்து தடுக்கப்பட்டது. அவிநாசி புதிய பேருந்து நிலைய  வளாகத்திற்குள் வணிக கடை 11-ல் தேநீர் கடை உள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று மழை பெய்ததால், வழக் கத்திற்கு மாறாக ஏராளமான பேருந்து பயணிகள், வாடிக்கையாளர்கள் கடை முன்பு திரண்டனர். அப்போது திடீ ரென கடையில் உபயோகப்படுத்திக்  கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது. இதனை சுதா ரித்த கடை ஊழியர்கள், அருகே உள்ள  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடைக்குள் இருந்த சிலிண் டரை சாக்கு மூடி வெளியேற்றி, கேஸ் கசிவை சரி செய்தனர்.இதற்கிடையே  கடை முன்பு திரண்டிருந்த மக்கள்  தலைதெறிக்க வேறு இடத்திற்கு ஓடி னர். இதனால் பெரும் விபத்து தடுக்கப் பட்டது.

நிலக்கடலை ஏலம்

திருப்பூர், மார்ச் 25- வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற  ஏலத்தில், ஒரு கிலோ நிலக்க டலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 லட்சத்து 81  ஆயிரத்து 578க்கு வர்ததகம் நடைபெற்றது.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:49.96/60அடி நீர்வரத்து:820கன அடி வெளியேற்றம்:84கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:52.23/90அடி.நீர்வரத்து:115கனஅடி வெளியேற்றம்:61கன அடி

வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

தருமபுரி, மார்ச் 25- தருமபுரியில் வெறிநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளை யம் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராஜ் (46). விவசாயியான இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில், ஆடு களை, வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார். இதனிடையே  நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு திம்மராஜ்  வெளியே வந்து பார்த்தார். அப்போது தெருநாய்கள் ஆடு களை கடித்து கொண்டிருந்தன. இதையடுத்து அவர் தெரு நாய்களை விரட்டினர். இதில், 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், சிலஆடுகள் காயமடைந்தன. இது குறித்து திம்மராஜ் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில்  புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே படுகாயம டைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை  அளித்தனர். தெருநாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்

தருமபுரி, மார்ச் 25- தருமபுரி மாவட்ட காவல் துறையினரால் பயன்படுத்தப் பட்டு கழிவு செய்யப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை ஏல முறையில் விற்பனை செய் யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான  ஏலம் தருமபுரி, வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 10 இருசக் கர வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனையாகின. இதேபோல் 4 சக்கர வாகனங்களில் 5 வாகனங்கள் மட்டும் விற்பனையா கின. இந்த 15 வாகனங்களையும் ஏல முறையில் விற்பனை செய்ததன் மூலம் ஜிஎஸ்டி. உட்பட ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 108 வசூல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, இளங்கோ, துணை  காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், ஆய்வாளர்கள் செல்வமணி, வெங்கடாஜலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

102 வயது மூதாட்டியின் நடனம் வைரல்

உதகை, மார்ச் 25- கோத்தகிரி அருகே கேர்கெம்பை கிராமத்தில் 102 வயது படுகர் இன மூதாட்டி, தங்களின் பாரம்பரிய நடனம் ஆடி யது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் இசை மற்றும் நடனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தால் இந்த நடனமாடி பொது மக்களை சந்திக்கின்றனர். இம்மக்கள் தங்களின்  திருவிழாக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளி நடனமாடி மகிழ்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கேர்கெம்பை கிரா மத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது 102 வயது படுகர் இன மூதாட்டி நடனமாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை காண்போருக்கு 102 வயதிலும்  மூதாட்டி நடனமாடியது பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

கூடலூர் அரசுப்பள்ளியில் திடீர் தீ

உதகை, மார்ச் 25- கூடலூரில் அரசு பள்ளிக்கூட அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப் பட்டிருந்த ஆயிரம் காலணிகள் தீக்கிரையாகின. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கால ணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடலூர் கல்வி மாவட்டத் தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள், லாரியில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. இதன்பின் காலணி மூட்டைகள் பள்ளிக்கூட அறைகளில் வைக்கப்பட் டது. இந்நிலையில், வெள்ளியன்று காலணிகள் வைக்கப் பட்டிருந்த ஒரு அறையில் இருந்து புகை வெளியேறியது. இதைக்கண்ட ஆசிரியர்கள், பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது காலணிகள் வைக்கப்பட்டி ருந்த அறையில் பயங்கர தீ பரவியது. இதைத்தொடர்ந்து கூட லூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை யடுத்து சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் (பொறுப்பு) சங்கர் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை பரவியவாறு இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. இதன்பின் பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இவ்விபத்தில் சுமார் ஆயிரம் காலணிகள் தீக்கிரையாகின. இதுகுறித்து தக வலறிந்த பள்ளிக்கல்வி அலுவலர்கள், காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து  மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு யாரா வது தீ வைத்தார்களா? என விசாரணை நடைபெற்று வரு கிறது.

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட காவலர் தப்பியோட்டம்

சேலம், மார்ச் 25- சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூரைச் சேர்ந்த வர் பிரபாகரன் (30). இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவ ருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற  மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், தலைவாசல் அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த மாணவியை திருமணம் செய்வதாகக்கூறி, ஆயுதப் படை காவலர் பிரபாகரன் கடத்தி சென்ற தாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் மக ளிர் காவல் நிலையத்தில் அளித்த புகா ரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத் தில் வழக்குப்பதிவு செய்து சிறுவாச்சூ ரில் இருந்த ஆயுதப்படை காவலர் பிரபா கரனை கைது செய்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது மகளிர் காவல் நிலையத்திலிருந்து வெளியே  ஓடிவந்த பிரபாகரன் சாலையில் தயா ராக நின்றிருந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். அவரை பிடிப்பதற்காக மற்ற காவலர்கள் ஓடி வந்த போதும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆயுதப்படை காவலர் பிரபாகரனை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர் பிரபாகரன் தப்பியோ டும் கண்காணிப்பு கேமராக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.

முட்டை விலை மேலும் சரிந்தது

நாமக்கல், மார்ச் 25- நாமக்கல் முட்டை விலை மேலும் 10 காசுகள் குறைக்கப் பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு,  பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8  கோடிக்கும் அதிகமான முட்டைக்கோழிகள் வளர்க்கப்படு கின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது. இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு  ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படு கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து  ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நட்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன்பின் முட்டை விலை உயரந்து ரூ.4.60 ஆக இருந்தது. இந்நிலை யில், நாமக்கல் மண்டல என்இசிசி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.60 ஆக இருந்த ஒரு முட்டை யின் விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண் ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப் பட்டது. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.95 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம், மார்ச் 25- சேலம் ரயில்வே கோட்ட  அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரயில்க ளில் ஏற்படும் கூட்ட நெரி சலை தவிர்க்க ரயில்வே நிர் வாகம் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகி றது. அந்த வகையில் திருப் பூர், சேலம், கோவை, ஈரோடு வழியாக வாரம் இருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயிலில் (வண்டி எண்: 22643) திங்க ளன்று (நாளை) முதல் இரண் டாம் வகுப்பு பொதுபெட்டி யில் கூடுதலாக ஒரு பெட்டி  இணைத்து இயக்கப்படும். இதேபோல் மறுமார்க்கத் தில் இயக்கப்படும் பாட்னா -  எர்ணாகுளம் விரைவு ரயிலில் (வண்டி எண்: 22644) மார்ச் 30 ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து இயக்கப் படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.


 







 

;