districts

img

அவிநாசியில் புதிய டாஸ்மாக் கடையை திறந்தால் போராட்டம் நடத்துவோம்: பொதுமக்கள் ஆவேசம்

அவிநாசி, ஜூன்.21 அவிநாசி பேரூராட்சி சேவூர் சாலை யில் தனியார் திரையரங்கு அருகே டாஸ்மார்க் கடை அமைய இருப்பதை கண்டித்து, பொதுமக்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட சேவூர் செல்லும் சாலையில் சிந்தாமணி   திரையரங்கு என்பது மிகவும் பழமை  வாய்ந்த திரையரங்கமாகும். இப்பகுதி யில் கிறிஸ்துவ தேவாலயம், விஷக்கடி  சிகிச்சைகளுக்கு பெயர் பெற்ற கிறிஸ் துவ மருத்துவமனை, பேருந்து நிறுத் தம், அம்மன் கோவில், 20க்கும் மேற் பட்ட தேநீர் மற்றும் உணவகங்கள், தனி யார் மருத்துவமனைகள், பனியன் நிறு வனங்கள், மரக்கடைகள், சரக்கு வாகன  ஆட்டோ ஸ்டாண்ட் என்று பரபரப்பாக இருந்து வரும் பகுதியாக உள்ளது. இப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப் புகள், அதிலிருந்து சிறிது தொலைவில் முத்து செட்டிபாளையத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட் டவை செயல்பட்டு வருகிறது. இப்பகுதி யில் சிந்தாமணி தியேட்டர் அருகே குளிர் சாதன வசதியுடன் கூடிய நவீன டாஸ் மாக் கடை அமைய உள்ளதாக தெரிய  வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவி நாசி பேரூராட்சியைச் சேர்ந்த கவுன்சி லர்கள் வியாழக்கிழமை நடைபெற்ற மன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். தற் பொழுது இந்த கடை திறப்பு விழா விற்கு தயாராக உள்ளது. மேலும் அவி நாசி பேரூராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் மூன்று மதுபான  கடைகளும், கால்நடை மருத்துவமனை  அருகில் ஒரு மதுபான கடையும், தற் பொழுது செயல்பட்டு கொண்டிருக்கி றது. இந்த மதுபான கடைகளில், கால நேரம் இன்றி 24 மணி நேரமும் மது விற் பனை நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்த  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. 

இந்த நிலையில் சிந்தாமணி திரை யரங்கு அருகில் நீதிமன்ற வழிகாட்டு தலை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப் பட உள்ளது. இதனால் பொதுமக்க ளும், மாணவ, மாணவிகளும் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள் என்று  அப்பகுதியைச் சேர்ந்த, கவுன்சிலர்கள்,  பொதுமக்களும் ஆதங்கத்தை கொட்டி  தீர்த்துள்ளனர். இது குறித்து  75 வயது மூதாட்டி ராமாத்தாள் என் பவர் கூறுகையில் டாஸ்மாக் கடை அமையும் இடத் திற்கு பின்புற மாகத் தான் எனது பேத்திகளுடன் வசித்து வருகிறேன், இந்த டாஸ்மாக் கடை அமைந்தால் பேத்திகள் படிப்பு பாதிக்கப்படும், எனது அருகில் குடியி ருப்பவர்கள் நிம்மதியாக தூங்க முடி யாது. ஆபாச வார்த்தைகள், அதிக  இசை கொண்ட பாடல்கள், மது போதை யில் பாட்டில்களை குடியிருப்பில் கூட  வீச நேரிடும். 60 வருடங்களாக குடியி ருந்து நிம்மதியாக வாழ்ந்து வருகி றோம். தற்பொழுது எங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும். தமிழக அர சும், மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி யில் கடை அமைப்பதை கைவிட வேண் டும், கடை அமைந்தால் எனது பேரக் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுப டுவோம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 57 வயது ராசாத்தி என்ற பெண்மணி (கான்வென்ட் வீதி) கூறுகை யில், நாங்கள் கவுன்சிலர் கூப்பிட்டதால் யாரோ அரசு  அதிகாரிகள் டாஸ்மாக் கடை வேண் டாம் என்று கருத்து கேட்பு நடத்து கிறார்கள் என்று நினைத்து வந்தோம்.  அரசு அதிகாரிகள் என்று நினைத்து, டாஸ்மாக் கடை இங்கு அமைக்க கூடாது என்று எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்று நோக்கத்தில் தான் வந்தோம். எங்களுடைய கருத்தை பத்திரிகையாளர்கள் அர சின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டும். குடும்பத்துடன் நிம்மதியாக  இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந் தால் மிகப்பெரிய பாதிப்புகளை நாங் கள் சந்திக்க நேரிடும். அரசாங்கம் டாஸ்மாக் கடை எண்ணிக்கையை குறைப்போம் என்று அறிவிப்பு  செய்தது. ஆனால் இதற்கு மாறாக, புதிய கடைகளை அமைத்து எண் ணிக்கையை கூட்டி வருகின்றனர். 

இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பல இன்னல்களை நாங் கள் சந்திக்க நேரிடும். இன்னும் இப்ப குதியில் பல பொதுமக்கள் அச்சத்துடன்  இருந்து வருகிறார்கள், டாஸ்மாக் கடை  உறுதியாக திறக்கப்படுமானால் கொட் டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடு கிறோம் என்று தெரிவித்தார்.  மேலும் கோகிலா என்ற 30 வயது  பெண்மணி கூறுகையில், அரசு எந்த  வகையில் இப்ப டிப்பட்ட டாஸ் மாக் கடையை அமைக்க முடிவு  செய்தது என்று தெரியவில்லை. வரிசை வீட்டில் நாங்கள் குடியிருந்து வருகி றோம். எப்படி எங்கள் குழந்தைகள் நிம் மதியாக படிக்க முடியும்? நிம்மதியாக உறங்க முடியும்? இப்பகுதியில் டாஸ் மாக் கடை என்பது, நான் குடியிருந்து  வரும் பகுதியில் தடுப்பு சுவர் மட்டுமே  பாதுகாப்பு. நகரப் பகுதியில் பரபரப் பாக இருந்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களின் எந்தவித கருத்தையும் கேட்காமல் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எப்படி முடிவு செய் தார்கள்?  டாஸ்மாக் கடை அமைந்தால்  நாங்கள் போராட்டத்தை மேற்கொள் வோம் என தெரிவித்தார்.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழ கத்தைச் சேர்ந்த கவுன்சிலர் தங்க வேல் கூறுகை யில், பொதுமக்கள் என் மீது  நம்பிக்கை வைத்து வாக்க ளித்துள்ளனர், இப்பகுதி பொதுமக்க ளுக்கு விசுவாசமாக இருப்பேன். இப்ப குதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று பேரூராட்சி மன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த  தீர்மானத்தை மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு  செய்து, அனுப்புவதற்குண்டான பணி கள் நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில் டாஸ்மாக் கடை அமைக்கும்  முயற்சி நடைபெற்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் முத்து செட்டிபா ளையம் பழனிச்சாமி தெரிவிக்கையில், அடிப்படைப் பிரச்சனைக்கு தீர்வு  வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது, இப்பகு தியில் டாஸ்மாக் கடை அமைந்தால், விபத்துக்கள் நேரிட வாய்ப்புகள் அதிக மாக உள்ளது. எங்கள் பகுதியைச் சேர்ந் தவர்கள் இப்பகுதியில் தான் பேருந் தில் பயணிப்பது வழக்கமாக உள்ளது. இதில் குறிப்பாக வேலைக்கு செல்லும்  பெண்கள் இரவு நேரத்தில் வரும்போது  அச்சத்துடன் தான் வருவார்கள். இப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந் தால் பொதுமக்களை திரட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக போராட்டம் நடத்த தயாராக உள்ளது  என தெரிவித்தார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி யிடம் கேட்ட போது, எட்டு  ஆண்டுகளுக்கு முன்பாக பழங்கரை  ஊராட்சி பச்சாம்பாளையத்தில் டாஸ் மார்க் கடை அமைக்க கூடாது என்று  போராட்டம் நடத்தியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி முத்துச்சாமி, ஈஸ் வரமூர்த்தி உட்பட 16 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது  வரை நீதிமன்றத்திற்கு சென்று வருகி றோம். தமிழக அரசாங்கம் பொறுப் பேற்று மூன்று வருடங்கள் கடந்து விட்டது. சட்டமன்ற கூட்டத்தில் டாஸ் மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத் தியவர்கள் மீது வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தனர். ஆனால் தற்போது வரை எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற வில்லை. டாஸ்மாக் கடை விஷயத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தற்பொழுது டாஸ்மாக் கடை இவ்வி டத்தில் அமையும் என்று தெரிய வருகி றது. இதற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை மேற் கொள்வோம் என்றார்.  பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் டாஸ் மாக் கடை அமைக்கக் கூடாது என்று தீர் மானம் நிறைவேற்றி இருந்தாலும், இந்த  கடையை எப்படியாவது அமைக்க வேண்டும் என அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் கொள்ளைப்புற வழியாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். சாம, பேத, தான, தண்டம் என பல வழிகளி லும் அவர்கள் இந்த கடையை அமைக்க  முயற்சிக்கின்றனர். மது போதையும், கள்ளச்சாராயமும் மக்கள் வாழ்க் கையை சீரழித்து வரும் நிலையில், புதி தாக கடை திறப்பது பொது மக்கள்  மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதை கவனத்தில் கொண்டு அரசு நிர்வாகம் இக்கடை அமைக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.  

-எம்.அருண்

;