districts

img

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சேலம், மே 9- சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசா யிகள் கூட்டியக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை பாஜக அரசும், அப் போதைய அதிமுக அரசும் திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாய சங்கம் இறுதியாக நீதி மன்ற தீர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. இதற் கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கை யில் விவசாயிகள் நலனுக்கு எதிரான எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்க மாட் டோம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது எட்டு வழி  சாலை திட்டம் வேறு பெயரில் நடை முறைப்படுத்த உள்ளதாக வந்த தகவ லைத் தொடர்ந்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு  விவசாயிகள் கூட்டியக்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் கூட்டியக்க தலைவர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். குப்ப னூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வி. செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு கண்டன உரையாற் றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, சிபிஎம்எல் மாவட்ட செயலா ளர் ஜி.மோகனசுந்தரம், எஸ்யூசிஐ மாவட்ட  செயலாளர் பி.மோகன் ஆகியோர் போராட் டத்தை வாழ்த்தி உரையாற்றினர். இதில், ஏஐகேஎம் மாநில பொதுச் செயலாளர் ஏ.சந்திரமோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட செயலாளர் என்.கே.செல்வராஜ், ஏஐகேகேஎம்எஸ் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, ஏஐகேஎஸ் மாவட்ட தலைவர் எம். சின்னசாமி, ஏஐகேஎம் நிர்வாகி வி.வ.அய் யந்துரை உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.