districts

img

கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து – பயணிகள் காயம்

கோவை, மே 7- காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திற்குள் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து பயணிகள் மீது மோதி விபத்துக் குள்ளானதில், 10 பேர் காயமடைந்தனர்.  கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். திங்கட்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களில் இங்கு அதிக அளவில் கூட்டம் காணப்படும். நேற்று முன்தி னம் திங்கட்கிழமை என்பதால் வெளியூர்களில் இருந்து  அதிகாலை நேரத்தில் நகரப் பேருந்து நிலையத்தில் பயணி கள் அதிக அளவில் வந்து பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அதிகாலை 5.30 மணியளவில் திடீரென்று கணுவா யில் இருந்து காந்திபுரம் வழியாக சிங்காநல்லூர் செல்லும்  தனியார் நகரப் பேருந்து, பேருந்து நிலையத்துக்குள் வேக மாக நுழைந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து  அங்கு நின்று இருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இத னால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். ஆனாலும், சில பய ணிகள் மீது மோதிய பேருந்து, முன்னால் நின்று கொண்டி ருந்த கிணத்துக்கடவு செல்லும் அரசு பேருந்தின் பின்பகுதி யில் லேசாக மோதி நின்றது.  இச்சம்பவத்தால், பேருந்து நிலைய வளாகத்தில் பொறி  வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரி, பயணிகள் என 9  பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டு நரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து காயமடைந்தவர்களை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்ப வம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ ஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.