கோவை, ஜூன் 10- அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பயனாளிகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் வி.செந் தில்பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் வெள்ளி யன்று வழங்கினர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம் பாட்டு வாரியத்தின் சார்பில், அனைவருக் கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 829 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மானி யத்துடன் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பணி ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக் கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந் தில் பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார், மாநகராட்சி ஆணையா ளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றி செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி. லீலா அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கோவை மாவட்ட தொழிலா ளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலா ளர் முறை எதிர்ப்பு தினத்தை (ஜூன்12) முன் னிட்டு கையெழுத்து இயக்கத்தை அமைச் சர் செந்தில்பாலாஜி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களி டம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகை யில், கோவை மாவட்டத்திற்கென முதல் வர், 18 கோடியே 45 லட்சம் மதிப்பிலான திட் டங்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்கியுள் ளார். இனி வரக்கூடிய காலத்தில் மீதமுள்ள பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப் படும். இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத் தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள் ளது. புதிதாக எந்த டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. பகுதி மக்கள், எங் கள் பகுதியில் டாஸ்மாக் கடை நடத்த அனு மதிக்ககூடாது என்று கோரிக்கை வைத்த தால் தான், உடனடியாக அந்த கடை இடமாற் றம் செய்யப்படுகிறது. சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலி னால் கோவை மாவட்ட மக்களின் குறை களை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407அழைப்புகள் வரப்பட்டுள்ளது. இதில், 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட் டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது, என்றார்.