districts

img

மண் கிடைக்காமல் மண்பாண்டத் தொழிலாளர்கள் கவலை - - கோ.மகேஷ்வரன்

ஈரோடு மாவட்டம், கோபி  அருகே உள்ள மொடச்சூர்,  கலிங்கியம், நஞ்சகவுண்டம் பாளையம், மேவானி, பொன் னாச்சிபுதூர், கூகலூர், சிறுவ லூர், ஆயிபாளையம், செம் மாண்டம்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் மண்பாண்டங்கள் செய்து வருகின்றனர். இதில் மண்பாண்ட பொருட்கள் செய்ய  ஓடத்துறை,  காவிலிபாளையம், குளங்களில் களிமண்ணும், சேவூர் குளங்களில் பருகமண் ணும், செட்டியாம்பாளையம் பகுதி குளத்தில் மணல்மண், வண்டல்மண்ணும், அந்தியூர் பகுதி குளத்தில் செம்மண், கூட்டு மண் போன்ற பல்வேறு பகுதிக ளில் உள்ள குளங்களில் மண் பாண்டங்கள் செய்ய மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட நிர்வ கத்தின் அனுமதியுடன் மண் எடுத்து வந்து ஐந்து வகையான மண்ணை பக்குவபடுத்தியும், பதப்படுத்தியும் கோடை காலத்தில் மண்பானையும், பொங்கலுக்கு பொங்கல்  பானையும், கார்த்திகையில் மண் விளக்கும் மற்ற சமயங்களில் மண் பாண்ட பொருட்களை தயார் செய்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த 10  ஆண்டுகளுக்கு முன் அரசு  குளங்களை தூர்வாரவும் விவ சாயிகள் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக் கப்பட்டது. இதில், அதிக நிலப் பரப்பை கொண்ட கோபி அருகே  உள்ள ஓடத்துறை குளம்,  நம்பியூர் அருகே  உள்ள காவிலி பாளையம் குளங் கள், சேவூர் பகுதி  குளம் என பல் வேறு பகுதி யில் உள்ள குளங்கள் ஆழமாக தூர்வாரி யதில் பருவ மழையால் குளங் கள் நிரம்பியது.

இதனால் கடந்தாண்டும் மண் பாண்டங்கள் செய்ய மண்  கிடைக்கவில்லை. இதனால்,  வெளியிலிருந்து ரூ.5000 வரை  மண்ணை விலைக்கு வாங்கி  மண்பாண்டங்கள் செய்து வந்ததா கவும் கடந்த சில மாதங்களாக மண் கிடைக்காமல் மண்பாண்ட தொழில் செய்ய முடியா நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும் தற் போது அத்திகடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி  காணப்படுவதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்ய  மண் எடுக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. தற் போது கோடை தொடங் கும் முன் வெயில்  வாட்டி வதைப்ப தால் குளிர்ச்சி யாக தண்ணீர் பருக மண் பானைகள் செய்ய மண் தேடும் நிலை  ஏற்பட்டுள்ளது. மண் கிடைக்காதால் மண்பாண்ட  தொழிலாளர்கள் கவலை தெரி வித்தனர்.  இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்தாண்டு சிறிய மண்பானை ரூ.250 முதல் 300க்கு விற்பனை யானது ஆனால் இந்தாண்டு மண் கிடைக்காமல் வெளியூரி லிருந்து மண்பாண்டம் செய்ய  மண் வாங்குவதால் விலை அதி கரிக்கும் என்பதால் மண் பானை ரூ.500 வரை விற்பனை ஆகும். மண் கிடைக்காதால் மண்பாண்டத் தொழிலாளர் கள் மாற்று வேலைக்கு செல் லும் நிலை ஏறபட்டுள்ளது. மண் பாண்டத் தொழிலையும் கோபி, நம்பியூர், டி.என்.பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள 30க் கும் மேற்பட்ட மண்பாண்டத்  தொழிலாளர்களையும் பாது காக்கவும் நிவாரண உதவி  வழங்க  வேண்டும் என மண் பாண்டத் தொழிலாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.