districts

img

பழங்குடியின மக்களுக்கு பொங்கல் பரிசு

கோவை, ஜன.7- கேரள எல்லையோர மலைக்கிராமங்களில் காவல் துறை சார்பில் கொண்டாடப் பட்ட பொங்கல் விழாவில்,  பழங்குடியின மக்களுக்கு  புத்தாடைகள் வழங்கப்பட் டது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் வட்டத்தில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள அத்திக் கடவு சுற்றுவட்டார பகுதிகளில் பரளிக்காடு, வேப்பமரத்தூர், முள்ளி உள்ளிட்ட இருப துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள் ளன. பழங்குடியின மக்கள் வசிக்கும் இக்கி ராமங்கள் கேரள வனப்பகுதியான அட்டப் பாடி காட்டை ஒட்டியுள்ளது. இக்காட்டு பகுதி யில் மாவோஸ்டுக்குள் நடமாட்டம் உள்ள தாக தமிழக சிறப்பு இலக்கு பிரிவு போலீசார்  முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கேரள காட்டை ஒட்டி யுள்ள தமிழக மலைக்கிராம மக்களுடன் நல்லுணர்வை வளர்க்கும் வகையில், அங்கு  வசிக்கும் பழங்குடியின  மக்களுக்கு கோவை  நிழல் மையம் என்ற தனியார் அமைப்பின் பங்களிப்புடன் பொங்கல் பரிசு வழங்கும்  நிகழ்ச்சி காவல்துறை சார்பில்  நடைபெற் ற்றது.  இந்த நிகழ்ச்சியில் அத்திக்கடவு மற்றும் இதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த 300 மலைவாழ் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சட்டை, சேலை கள், குழந்தைகளுக்கான ஆடைகள் என புத் தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் சிறப்பு இலக்கு படை துணை கண்கா ணிப்பாளர் சசிக்குமார் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.