districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தாமதமாக துவங்கிய வாக்குப்பதிவு - நேரம் நீட்டிப்பு

கோவை, ஏப்,19- சூலூர் அருகே இராசிபாளையம் கிராமத் தில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர  கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரத் திற்கும் மேலாக வாக்கு பதிவு தாமதமானது.  இதனையடுத்து, அரசியல் கட்சியினர் அதிகாரி களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,  வாக்குப்பதிவை இரண்டு மணிநேரம்  நீட்டித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது இராசிபாளையம் கிராமம். இங்கு சுமார் 2500க்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், 18ஆவது மக்களவைத் தேர்தலை ஒட்டி  வெள்ளியன்று, கிராம மக்கள் ஆர்வமாக  ஓட்டு செலுத்தி வந்தனர். அப்போது, 2ஆவது  வார்டில், சுமார் 70 வாக்காளர்கள் வாக்கு  செலுத்திய பிறகு, அங்கு வைக்கப்பட்டிருந்த விவிபேடில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அனைத்து கட்சி னர் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக, பிரச்சனை  முடிவுபெற்று விவிபேட் மாற்றி வைக்கப்பட் டது. இதனால், அங்கு ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததது மட்டுமில்லாமல், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக் குப்பதிவு நடைபெறவில்லை. வாக்கு செலுத்த வந்த மக்களும் திரும்பிச் சென்ற னர். இதன்பிறகு, இயந்திரம் மாற்றி வைக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை மீண்டும் நடை பெற்றது. மக்களும் வாக்குகளை செலுத்தி வந்தனர்.  இந்நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் அதே வார்டில் மீண்டும் பிரச்சனை உரு வானது. அதாவது, வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இயந்திரத்தின் வரிசைகளை அதிகாரிகள் மாற்றி வைத்ததாக  அரசி யல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். தேர்தல் நிறுத்த வேண்டும் எனவும் கூச்ச லிட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியின ரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து,  பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற் றது. கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம்  வாக்குப்பதிவு தடைபெற்றதால், அப்பகுதி யில் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து, இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமத மான நிலையில், வாக்கு பதிவு முடியும் நேர மான ஆறு மணியை கடந்து மேலும் இரண்டு  மணி நேரம் வாக்கு பதிவு செய்ய நேரத்தை நீட்டித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நாமக்கல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு

நாமக்கல், ஏப். 19- நாமக்கல் மாவட்டத்தில் விறுவி றுப்பாக வாக்குப்பதிவுகள் நடை பெற்றது. தமிழகம் முழுவதும் நாடாளு மன்றத் தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகு தியில் இந்தியா கூட்டணியின் திமுக  வேட்பாளராக கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சியை சேர்ந்த மாதேஸ்வ ரன் பொட்டணம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சரும் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மதிவேந்தன் ராசிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது மனைவியுடன் வாக்கு செலுத்தினார். அதன் பிறகு பத்திரிகையாளர் களிடம் பேசியதாவது, இந்திய  மக்களின் முக்கிய கட மையான ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஜனநாய கத்தை மற்றும் இந்தியா என்பது அனைவருக்கும் என்பதை தொடர்ந்து நிலைநாட்டியிட வேண் டும். அதற்கு இந்தியா கூட்டணி நிச்சயமாக வெல்லும் என தெரிவித் தார். தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் திருச்செங்கோடு அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக அவர் வருகை தரும் பொழுது வாக்குப்பதிவு இயந்திரம் சுமார் அரை மணி நேரத் திற்கு மேல் பழுதானதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  இயந்திரம் சரியாகும் வரை காத்தி ருந்து தனது வாக்கை பதிவு செய் தார். மாநிலங்களவை எம்பியும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரு மான கே.ஆர்.ஆர்.என் ராஜேஷ்கு மார், ராசிபுரம் அருகே கட்டனாச் சம் பட்டி ஊராட்சி சேவை மையத் தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவ டிகள் தனது வாக்கை பதிவு செய் தார் . நாமக்கல் நாடாளுமன்ற தொகு தியில் சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பொன் னுசாமி தனது சொந்த ஊரான கொல்லிமலை கீழ் சோளக்காடு வாக்குச்சாவடியில் தனது வாக் கினை பதிவு செய்தார். தொடர்ந்து நாமக்கல் நாடாளு மன்ற தொகுதியில் முதல் தலை முறை வாக்காளர்களும் உற்சாக மாக தங்கள் ஜனநாயக கடமை ஆற்றும் வகையில் தங்கள் வாக்கு களை பதிவு செய்தனர்.

மாவிலை தோரணம் கட்டி வரவேற்பு

பொள்ளாச்சி, ஏப்.19- கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதி யில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாழை  மரம், தென்னை மற்றும் மாவிலை தோரணம் கட்டி, வாக்காளர் கள் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து, மாதிரி வாக்குப்பதிவு மையத்தை மாவட்ட சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார். மேலும், வாக்கு மையத்திற்கு வாக்கினை  பதிவு செய்ய வந்த வாக்காளர்களுக்கு சார் ஆட்சியர் மரக்கன் றினை பரிசளித்தார்.  இதேபோல், பொள்ளாச்சி அடுத்த சந்தே கவுண்டம்பா ளையம் வாக்கு பதிவு மையத்திலும் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டு வாக்காளர்களை வரவேற்றது வாக்காளர் மத்தியில்  நெகழ்ச்சியினை ஏற்படுத்தியது. இந்த வாக்கு பதிவு மையங் களில் வாக்காளர்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.

எந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

ஈரோடு, ஏப்.19- ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சித் தோடு அடுத்த மேட்டு நாசு வம்பாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில்  வாக்குப்பதிவு காலை தொடங்கியது. இங்கு  அமைந்துள்ள வாக்குச்சா வடி எண் 23 யில் பொதுமக் கள் வாக்களிக்க காத்திருந்த னர். வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் திடீ ரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த கட் டமாக எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு கார ணமாக வாக்குப்பதிவு நிறுத் தப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந் தனர். இதைதொடர்ந்து வாக் குப்பதிவு எந்திர பழுது சரி  செய்யப்பட்டு வாக்குப்ப திவு மீண்டும் தெடங்கியது. இதேபோல் சில பகுதி யில் எந்திர கோளாறு ஏற்பட் டதால் வாக்குப்பதிவு சற்று தாமதம் ஏற்ப்பட்டது.


 

 

 

;