districts

சேலம் காப்புக்காடுகளில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

சேலம், ஆக.10- சேலம் மாவட்டத்தில் பசுமை  இயக்க திட்டத்தில் காப்புக்காடுக ளில் மரக்கன்றுகள் நடவு செய்ய 3 லட்சம் குழிகள் வெட்டப்பட்டுள்ள நிலையில், வனத்துறையினர் பருவ மழையை எதிர்நோக்கியுள்ளனர். நாடு முழுவதும் வனப்பரப்பின் அளவு 33 சதவிகிதம் இருக்க வேண் டும் என்பதற்காக பல்வேறு திட்டங் களின் மூலம் வனப்பரப்பை அதிக ரிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட் டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசு பசுமை இயக்கம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வனத்துறை மூலம் மரக் கன்றுகளை நாற்றாங்காலில் உற் பத்தி செய்து, அதனை விவசாயிகள்  மூலமும், வனப்பரப்பிலும் நடவு செய் யும் பணியை மேற்கொண்டுள்ளது. நடப்பாண்டில் பல்வேறு திட்டங்க ளின் மூலம் நிதி ஒதுக்கீடு பெற்று, மரக் கன்று உற்பத்தி செய்துள்ள வனத் துறை, பருவமழை காலத்தில் நடவு பணியை மேற்கொள்ள ஏற்பாடு களை செய்துள்ளது.

இதற்காக ஒவ் வொரு வனக்கோட்டத்திற்கும் குறிப் பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள் ளது. சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில் சேலம், ஆத்தூர் என 2  வனக்கோட்டங்கள் உள்ளன. இங் குள்ள வனச்சரகங்களிலும், சமூக காடுகள் கோட்டங்களிலும் கிரீன் தமிழ் நாடு மிஷன், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க பசுமையாக்கல் திட்டம், நபார்டு, மரகத பூஞ்சோலை உள் ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிதி  மூலம் தமிழ்நாடு பசுமை இயக்கத் தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. சேலம் வனக்கோட்டத்தில் 8 லட் சம் மரக்கன்றுகளும், ஆத்தூர் வனக் கோட்டத்தில் 6.33 லட்சம் மரக்கன்று களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த வனச்சரகங்களில் உள்ள நாற்றாங்கால்களில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டு இந்த மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும், வனப் பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் நடவு செய்யவும் ஏற்பாடுகளை செய் துள்ளனர். இதற்காக சரகம் வாரியாக அந்தந்த பகுதி காப்புக்காடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்வதற் காக குழிகள் வெட்டும் பணி கடந்த  ஒரு மாதமாக நடந்து வருகிறது. இது வரையில் சேலம், ஆத்தூர் வனக் கோட்டங்களில் உள்ள காப்புக்காடு களில் 3 லட்சம் குழிகள் தோண்டப்பட் டுள்ளது. இந்த குழிகளில் பருவமழை தீவிரமாக பெய்யத் துவங்கியதும் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள் ளனர்.