திருப்பூர், பிப். 21 - ஊத்துக்குளி வட்டம், செங்காளிபாளை யம் கிராமம் அண்ணா நகர் ஏரியின் கரையை தகர்த்து, நீர் தேங்கும் பகுதியை அழித்த நபர் கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அழிக்கப் பட்ட ஏரிக்கரையை உடனடியாக மீண்டும் அமைத்து தரவும் பாதிக்கப்பட்ட விவசாயி கள் சார்பாக திருப்பூர் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. செவ்வாயன்று திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளைத் தெரி வித்தனர். இதில் செங்காளிபாளையம் பகுதி விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: செங்காளிபாளையம் கிராமத்தில் புல எண். 148, 152, 153, 154 ஆகியவற்றில் அமைந் துள்ள அண்ணா நகர் ஏரியில் மழைக்காலங் களில் ஓடையில் வரும் நீரை தேக்கி அப்பகு தியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து பயன் அடைந்து வருகிறார்கள். தற் போது அவிநாசி-அத்திக்கடவு திட்டத்திலும் இந்த ஏரி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியன்று ஈரோடு, குமலன் குட்டையை சேர்ந்த விகாஸ் அகர்வால், ரவி அகர்வால் ஆகியோர் சார்பில் அவர்களது ஏஜண்டுகள் ஈரோட்டை சேர்ந்த தேவராஜ், கோவையைச் சேர்ந்த அசோக் ஆகியோர் ஜேசிபி எந்திரம் மூலமாக, ஏராளமான டிப்பர் லாரிகளை கொண்டு, ஒரே நாளில் அண்ணா நகர் ஏரி யின் 25 அடி உயரம், 25 அடி அகலம், 150 அடி நீளத்திற்கு வலது கரையை உடைத்துள்ள னர். அங்கிருந்து 200க்கும் மேற்பட்ட நடைகள் மூலம் மண் அகற்றப்பட்டு, வலது கரையே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய நீர்ப்பிடிப்பு பகுதி அழிக்கப்பட் டுள்ளது.
இனிமேல் ஓடையில் வரும் மழை வெள்ள நீர் மற்றும் அவிநாசி - அத்திக்கடவு நீர் தேக்க வழியில்லாமல் வெளியேறி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியை அழித்துச் செல்லும். மீதி இருக்கும் கரைகளும் உடைந்து, மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்படும். அப்ப குதி விவசாய நிலங்களும், குடியிருப்பு வாசி களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் அபா யம் உள்ளது. எனவே,சுயநல நோக்கோடு ஏரியின் கரையை உடைத்த மேற்படி நபர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இந்த ஏரிக்கரையை உடனடியாக அமைத்து கொடுத்து, இப்பகுதி விவசாயிகளின் வாழ் வாதாரம் காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஏற்கெனவே கடந்த 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிஏபி கரை சிதைப்பு
சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்து வோர் சங்கத்தின் தலைவர் வை.பழனிசாமி அளித்த மனுவில், பிஏபி வாய்க்காலில் ஆக்கி ரமிப்புகளை அகற்ற வேண்டும், பல்லடம் நீட் டிப்பு வாய்க்காலில் அம்மாபாளையம் 7 ஆவது மடைக்கு அருகில் கரையை சிதைத் துள்ளனர். 19ஆவது மடைக்கு கீழே உள்ள சைமன் பாலம் அருகில் சிதைத்துள்ளனர். அவற்றை சரி செய்வதுடன், 22ஆவது மடை யில் செல்லும் கிளை வாய்க்கால் காலைக ளில் உட்பிரிவு ஏற்படுத்தி தர வேண்டும் என் றும் கேட்டுக் கொண்டார். மேலும் பிஏபி திட்டத்திற்காக பூமலூர் கிரா மத்தில் கையகப்படுத்திய நிலங்களுக்கு இது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்ப டவில்லை. எனவே மெயின் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங் களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் வை. பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். அப்புசாமி அளித்த மனுவில், கால்நடைக ளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க கால்நடை மருத்துவத் துறை மூலம் உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். ஊத்துக்குளி பாரதி நகரில் வசித்து வரும் கருப்புசாமி அளித்த மனுவில், தனது தாயார் பெயரில் கடந்த 2000 ஆவது ஆண்டு பெருந் துறை வட்டாட்சியர் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார். ஆனால் இந்த பட்டா கிராமக் கணக்கில் மாறுதல் செய்யப்பட வில்லை. இதனால் வீடு புணரமைப்பதற்கு வங்கி கடனுதவி பெற முடியவில்லை. எனவே கிராமக் கணக்கில் சேர்க்கவும், தனது பெய ரில் பட்டா மாறுதல் செய்யவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.