2017-18, 2018-19 கல்வியாண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் க.வி.ஸ்ரீபத், நாகலூர், அரியூர், கள்ளக்குறிச்சி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.