districts

img

குடிநீர் வழங்க வலியுறுத்தி மக்கள் மறியல்

நாமக்கல், ஜன.30- குடிநீர் வழங்க வலியு றுத்தி கொல்லிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடைகளை அடைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந் தமங்கலத்தை அடுத்த கொல் லிமலை அடிவாரம், கார வள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது. இந்த கிணற்றிலிருந்து அப் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும் பங்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். அதன்பின் அடுத்து சில ஆண்டுகளில் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிணற்றை தூர்வாரியும், ஆழப் படுத்தி மின்மோட்டார் வைத்து பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலை யில், இந்த கிணற்றின் அருகாமையில் உள்ள நிலத்தின் உரிமையாளர், கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு கிணறு தன்னுடையது என வும், கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு குடி நீர் வழங்க முடியாது எனவும் கூறி, மின்மோட் டார் மற்றும் மின்சார வயர்களை அப்புறப் படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட் டும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று கொல்லிமலை அடிவாரப்பகுதி யான காரவள்ளியில் கடைகளை அடைத் தும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடு பட்டனர்.

;