திருப்பூர், செப்.27- திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உறுதிய ளித்தப்படி திலகர்நகர் பகுதியில் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்ட லத்துக்கு உட்பட்ட 11ஆவது வார்டு திலகர் நகர் பகுதியில் நீண்ட காலமாக நிறை வேற்றப்படாமல் உள்ள சாலை வசதி, கழிவு நீர் வாய்கால் உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றக் கோரி ஜூலை 18ஆம் தேதி மண்டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதை யடுத்து உதவி பொறியாளர் உடனடியாக செய்யக்கூடிய சீரமைப்பு பணிகளை செய்வ தாக உறுதியளித்தார். மனு அளித்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் எந்தப் பணி களும் நடைபெறாததால், புதனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளை யம் நகரக்குழு உறுப்பினர் நவபாலன் தலை மையில், பொதுமக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் உதவி ஆணையர் சி.நல்லசிவம் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தில் பொதுமக்கள் கூறியதா வது, சாலை வசதி, கழிவு நீர் வாய்கால் அமைப்பது உட்பட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி ஜூலை மாதம் காத்திருப்பு போரட்டம் நடத்தப்பட்டது. உதவி பொறியாளர் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் சாலை அமைப்பதாக உறுதி அளித்தார். இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த பணிகளும் நடைபெற வில்லை. இத்தனை நாட்கள் என்ன பணிகள் நடைபெற்றது என்று கூற வேண்டும். கேட்டால் ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்று கூறுகின்றனர். சாலைகளில் உள்ள குழிக ளால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. வீட் டின் முன்பு குழி தோண்டி மூன்று நாட்களாக மூடப்படாமல் உள்ளது. நாங்கள் எப்படி வெளியே சென்று வருவது. கால்வாய் இல்லா ததால் மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வீட்டிற்குள் வருகிறது. இப்பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை உள்ள உயர் அதிகாரி வந்து தீர்வு கூறினால் மட்டுமே கலைந்து செல் வோம் என்றனர். இதையடுத்து, பேசிய உதவி பொறியாளர் எஸ்.முனியாண்டி, ஈபி கேபிள் பதிக்கும் பணி கள் நடைபெற்று வந்ததால்தான் சாலை அமைப்பதற்கு கால தாமதம் ஆனது.
குடிநீர் குழாய்களில் ஏழு உடைப்புகள் உள்ளதை சரி செய்து விட்டு சாலை பணிகளை தொடங்கு வோம். அக்டோபர் 12க்குள் சாலை பணி களை முடித்து விடுவோம். கழிவுநீர் கால் வாய் உடனடியாக அமைப்பது குறித்து என் னால் உறுதியாக கூறமுடியாது. எனவே கால் வாய் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு போட்டு, வரும் திங்களன்று மாநகராட்சி துணை ஆணையரிடம் அளிப்பதாக உறு தியளித்தார். இதேபோல்தான் சென்ற முறையும் உதவி பொறியாளர் ஒருவர் உறுதியளித்தார். இந்த முறை அவருக்கு பதில் இவர் வந்து கூறு கிறார். மாநகராட்சி துணை ஆணையர் நேரில் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தெரிவித்து விட்டு மீண்டும் காத்திருப்பு போராட்டதை மக்கள் தொடர்ந் தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் முருகேசன் இன்னும் 10 நாட்களுக்குள் சாலை பணிகள் முடிக்கப் படும். அனைத்து வீதிகளிலும் கழிவு நீர் கால் வாய் அமைப்பதற்கான மதீப்பீட்டை 15 நாட்க ளுக்குள் தயாரித்து, அடுத்தக்கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதிய ளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், நகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.