ஓய்வூதியம் பெரும் முறைசார தொழிலாளர்கள் ஆயுள் சான்றிதழை ஏப்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
உதகை, ஏப். 4- மாதந்திர ஓய்வூதியம் பெரும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் ஆயுள் சான்றிதழை ஏப்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் உதவி ஆணையாளர் லெனின் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவல கத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு உள்ளிட்ட 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் தொழி லாளர்கள் அனைவரும் 2023-24-ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றினை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் http://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணைய தளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். எனவே, மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களுடைய ஆயுள் சான் றினை பதிவேற்றம் செய்ய ஆதார் அட்டை, ரேசன் அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம், வங்கி புத்தகம் நகல் மற்றும் நடப்பு மாதம் வரை வரவு, செலவு விபரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கணினி மையம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பெண் உயிரிழப்பு
கோவை, ஏப்.4- சூலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, இவருக்கு தங்க மணி என்ற மனைவி மற்றும் பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், நடுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு தாய் தங்கமணியுடன் பிரதீப் குமார் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது காமாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சுல்தான்பேட்டை நோக்கி சென்று கொண்டி ருந்த அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசிய தாக கூறப்படுகிறது. இதில், நிலை தடுமாறிய பிரதீப் குமார் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுள்ளார். இதில், பின்புறமாக அமர்ந்திருந்த தாய் தங்கமணி பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பிரதீப் குமார் வலது புறமாக கீழே விழுந்ததால் காயங் களுடன் உயிர்த்தப்பினர். உடனடியாக சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்
நாமக்கல். ஏப். 4- நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றும், 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளார். இதில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த குணாளன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிப் பிரிவு மேலாளராகவும், பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும், வெண்ணந்தூர் பிடிஓ மாதவன் திருச்செங்கோடு பிடிஓவாகவும், திருச்செங்கோடு பிடிஓ (கிராம ஊராட்சிகள்) டேவிட் அமல்ராஜ் பள்ளிபாளையம் பிடிஓ வாகவும், அங்கு பணியாற்றி வந்த மலர்விழி எலச்சிபாளையம் பிடிஓ வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமகிரிப்பேட்டை பிடிஓ சரவணன் அதே வட்டாரத்தில் கிராம ஊராட்சிக்கும், அங்கு கிராம ஊராட்சியில் பணியாற்றி வந்த பிடிஓ சுந்தரம் புதுச்சத்திரம் பிடிஓ வாகவும், அங்கு பணியாற்றி வந்த தனம் ராசிபுரம் பிடிஓ வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் பிடிஓ பாஸ்கர் நாமக்கல் பிடிஓ வாகவும், எலச்சிபாளையம் பிடிஓ (கிராம ஊராட்சிகள் )தமிழரசி எருமப்பட்டி பிடிஓ வாகவும் அங்கு பணியாற்று வந்த லோக மணிகண்டன் மல்லசமுத்திரம் (கிராம ஊராட்சிகள்) பி.டி.ஓவாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மல்லசமுத்திரம் பிடிஓ வாக பணியாற்று வந்த அருண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கூடுதல் பிடிஓ வாகவும், ஏற்கனவே அங்கு பணியாற்றி வந்த சுகிதா சேர்ந்தமங்கலம் பிடிஓ கவும், அங்கு பணியாற்றி வந்த அருளப்பன், எலச்சி பாளையம் பிடிஓ வாகவும் எலச்சிபாளையம் பிடிஓ புஷ்பராஜன் கபிலர்மலை பிடிஓ வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர் . இதுபோல மாவட்டம் முழுவதும் 5 துணை பிடிஓக்களும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச குறுஞ்செய்தி - போலீசார் விசாரணை
கோவை, ஏப்.4- கோவையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை அளித்த நபர்கள் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை - போத்தனூர் உமர் நகரில் வாடகை ஆட்டோ தொடர்பாக தனியார் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்துக்கு டோல் பிரீ எண்ணும் (இலவச எண்) உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 எண்களில் இருந்து இந்த மைய இலவச எண் கொண்ட செல்போ னுக்கு அடிக்கடி போன் வந்து உள்ளது. அதை எடுத்து பெண் கள் பேசும்போது, எதிர்முனையில் பேசுபவர்கள் சரியாக பேசுவது இல்லை. இதையடுத்து, கடந்த 30ஆம் தேதியில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி, புகைப்படங்கள் வந்து உள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மையத்தில் வேலை செய்து வரும் பெண் கள் சக ஊழியர்களிடம் தெரிவித்து உள்ளனர். இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, இந்த தனியார் சேவை மையத்துக்கு 2 செல்போன்களில் இருந்து ஆபாச மெசேஜ் வந்து உள்ளது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த செல்போன் எண் யாருடையது, எதற்காக அவர்கள் ஆபாச மெசேஜ் அனுப்பினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி, ஏப்.4- தருமபுரி அருகே உள்ள அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட் டபுது ரெட்டியூரில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வரு வதாலும், மழைக்காலங்களில் தண்ணீர் கட்டடத்தில் ஒழுகு வதாலும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற் றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படும் நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில், கட்டடத்தை மாற்றி புதுப்பித்து தர வேண் டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித் தும், எந்த நடவடிக்கும் எடுக்ப்படவில்லை. தொடர்ந்து பள் ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்றால் கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் வலியு றுத்தியுள்ளனர்.
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
கோவை, ஏப். 4- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாமிசிவானந்தா ரோட் டை சேர்ந்தவர் வைத்தியலிங் கம் (53). விவசாயி. இவர் சம்பவத்்தன்று கணபதியில் இருந்து சரவணம்பட்டிக்கு பேருந்தில் சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படு த்தி, வைத்தியலிங்கம் பாக் கெட்டில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை யாரோ ஒருவர் திருடிச்சென் றுள்ளார். இது குறித்து சரவ ணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தக்காளி விலை குறைந்தும், சில்லறை விலையில் விற்க மறுப்பு
தாராபுரம், ஏப். 4 - தாராபுரம் உழவர் சந்தையில் தக்காளி விலை சரிந்துள்ளது. விலை சரிந்த போதிலும், சில்லறை விலைக்கு விற்காமல், பெட்டியில் மொத்தமாக விற்பதால் பொதுமக்கள் ஏமாற் றமடைந்துள்ளனர். தாராபுரம் அண்ணா நகரில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் ஏராளமான தக்கா ளியை விற்பனைக்கு கொண்டு வருகின்ற னர். வியாபாரிகளுக்கு விற்பதற்காகவே 15 கிலோ கொண்ட பெட்டியில் தக்காளியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் . தக்காளி சில்லரை விற்பனை யில் விலை கிலோ ரூ.9 க்கு அதிகாரிகள் விலைப்பட்டியல் போட்டுள்ளனர். ஆனால், விவசாயிகள் ஏராளமான தக்காளியை கொண்டு வந்த போதிலும் சில்லறையில் கொட்டி விற்பனை செய்ய மறுத்து மொத்தமாக 15 கிலோ பெட்டி களை வியாபாரிகளுக்கு விற்பனை செய் யவே முன் வந்தனர். தரமற்ற தக்காளியை மட் டுமே சில்லறை விலையில் விற்பனை செய்தனர். இதனால் விலை மலிந்தும் தர மான தக்காளியை வாங்க இயலாமல் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மொத் தமாக காய்கறிகளை விற்பனை செய்யும் விவ சாயிகள் மீது நடவடிக்கை எடுத்து சில்ல றையில் வாங்கும் பொது மக்களுக்கு அனைத் துகாய்கறிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.