திருப்பூர் ஜன.18- 1224 மாணவ, மாணவிகள் படிப்பதற்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்களை வெளியில் அமர வைத்து பாடம் எடுக்கும் சூழலில் அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் பகு தியில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப் பள்ளி முறையாக பராமரிப்பு செய்யப்படா மல் உள்ளது. 2002 ஆம் ஆண்டு அரசு உயர்நி லைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் 1224 மாணவ, மாணவிகள் கல்வி கற்கிறார்கள். இதில் 582 மாணவிகளுக்கு இரண்டு கழிப்பறைகளும், 642 மாணவர்க ளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. மேலும் மாணவிகள் பயன்படுத்தும் கழிவ றையில் மேல் கூரை இல்லாததால் சமூக விரோதிகள் சிலர் எட்டிப் பார்த்தது தெரியவந் ததையடுத்து, பெற்றோர்கள் சிலர் பள்ளி நிர் வாகிகளிடம் முறையிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் தலையிட்டு இந்த பிரச்சனைகளின் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். எனினும் பல நாட்கள் ஆகியும் மாணவி கள் பயன்படுத்தும் கழிப்பறை மேற்கூரை மூடப்படாமல் உள்ளதால் பெற்றோர்கள், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளு டன் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளி நிர்வாகி களிடம் இது குறித்து கேட்டுள்ளனர். பள்ளி யின் துணை தலைமை ஆசிரியர், அரசாங்கத் திடம் இது குறித்து கூறியுள்ளோம் ஒரு மாதத் திற்குள் பள்ளியை பராமரிப்பு செய்து விடு வோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது வரை பராமரிக்கப்படவில்லை என்று மாணவி கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை மூடப்ப டாமல் உள்ளதால் பெண்கள் பள்ளிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிவறைகள் இல்லாததால் நோய் தொற்று ஏற்படும் அபாய மும் உள்ளது. எனவே பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர் ஏ.ஐயர் கூறியதாவது, 1224 மாணவ, மாணவிகள் படிப்பதற்கு போதுமான வகுப்பறைகள் இல் லாததால் இரண்டு வகுப்பறைகளை ஒருங்கி ணைத்து வெளியில் அமர வைத்து பாடம் நடத்துகிறோம். ஒரு வகுப்பிற்கு 40 மாணவர் கள் என்ற அடிப்படையில் அமர வைக்க இன்னும் 14 வகுப்பறைகள் தேவைப்படுகி றது. உடனடியாக நான்கு வகுப்பறைகள் ஏற்ப டுத்தி தர வேண்டும் என்று, திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் கடந்த அக்டோபர் மாதம் மனு கொடுத் துள்ளோம். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பள் ளியை பார்வையிட்டார். கூடுதல் கழிப்பறை கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் போதுமான இடவசதி இல்லாத தால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டது. மேலும் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை களுக்கு மேல் கூரை அமைப்பதற்கு பெற் றோர் ஒருவர் நிதி உதவி செய்ய முன்வந்துள் ளார். இந்த மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவடையும். பழைய வகுப்பறை கட்டி டத்தை இடிப்பதற்கு உத்தரவிட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும், பொது பணித்துறை யிடம் நிதி இல்லாததால் இடிக்கப்படாமல் உள்ளது. இது இடிக்கப்பட்டால் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்ட முடியும் என்று தெரிவித்தார்.