ரமலான் பண்டிகையை ஒட்டி அன்னூர் திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு வேஷ்டி, சாலை, பிரியாணி அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு வேட்டி,சேலை, அரிசி,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதில், திமுகவின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்று இத்தொகுப்புகளை வழங்கினார். இதில், திமுக வார்டு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.