districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாகனம் மோதி ஒருவர் பலி

உதகை, ஜூன் 25- உதகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் ஊட்டி புதுமந்து அடுத்த டம்ளர் முடக்கு  காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (55). இவர் அந்த பகுதி யில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலை யில் வெள்ளியன்று இரவு பணி முடிந்து ஸ்டீபன் தேவால யம் சாலையில் இருந்து புதுமந்து செல்லும் சாலை வழியாக  வீடு திரும்பிக் கொண்ருந்த ரமேஷ் மீது, அவ்வழியாக வந்த  வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தூக்கி  வீசப்பட்ட ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், உதகை மத்திய காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இதன் பேரில் காவல் ஆய்வாளர் பிலிப் தலைமை யிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை அடையாளம் காணும் வகையில் அந்த பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து  வருகின்றனர்.

கோவை தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

கோவை, ஜூன் 25- கோவை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர்  தட்பாட்டை போக்க ரூ.5 கோடி மதிப்பில் 107 இடங்களில் புதி தாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  கோவை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு  ஏற்படும் மாநகராட்சிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் உப்பு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி உள்ளது. மேலும், சில ஆழ் துளை கிணறுகள் தண்ணீர் இல்லாததால் பயன்பாடின்றி விடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு உப்பு தண் ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மாநகராட்சி யில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.10 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.5 கோடிக்கு 107 இடங்களில்  புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின் றன. இதற்கான, ஒப்புதல் மாநகராட்சி கூட்டத்தில் பெறப்பட் டுள்ளது.  இதுதவிர, ஏற்கனவே உள்ள பழைய ஆழ்துளை  கிணறுகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 200 ஆழ்துளை கிணறுகள் மறுபுனர மைப்பு செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந் தால் மாநகராட்சி பகுதியில் உப்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப டாது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகி றது. தற்போது முத்தண்ணன் குளக்கரை அருகே ஆர்.எஸ். புரம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. விரைவில் 107 இடங்களிலும் ஆழ்துளை  கிணறு அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

ஆடுகள் வழங்கியதில் முறைகேடு  அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

தருமபுரி ஜூன் 25- தருமபுரியில், ஆடுகள் வழங்கியதில் அதிகாரிகள் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தருமபுரி அருகே உள்ள  எர்ரபட்டி கிராமத்தில் கால் நடை பராமரிப்பு துறையின் சார்பில் பெண்கள் தொழில்  முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் பெண்க ளுக்கு 100 சதவிகித மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற் றும்  உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு மூன்று பயனாளிகளுக்கு ஆடு களை வழங்கினார்.  இதனையடுத்து மீதமுள்ள ஆடுகளை உரிய பயனாளி களுக்கு வழங்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்திவிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு சென் றார். இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை  சார்பில் டோக்கன் வழங்கப்பட்ட பயனாளிகள் ஆடு களை பெறுவதற்காக காத்துக் கொண்டிருந்தபோது, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் டெம்போ வேனில் ஆடுகளைக் கொண்டு வந்து நிறுத்தி உரிய பயனா ளிகள் இடத்தில் டோக்கனை பெற்றுக்கொண்டு ஆடுகளை  வழங்கினார். அப்போது, ஆடுகளை பெற்ற பயனாளிகள் ஆடுகள் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகளாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், பயனாளிகள் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து பயனாளிகள் கூறும்போது, அரசு திட்டத் தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஐந்து ஆடுகள் வழங்கப்படும் என்று கூறிவிட்டு பால்குடிக்கும் ஆட்டுக்குட்டிகளை கொடுத் தால் நாங்கள் ஆட்டு குட்டிகளுக்கு புட்டி பால் கொடுத்து காப் பாற்ற முடியுமா? மூன்று நாட்களில் இறந்து போகும் நிலை யில் உள்ள  இந்த ஆட்டுக்குட்டிகளை நாங்கள் பெற்றுக் கொள்ள மாட்டோம். பராமரிக்கும் நிலையிலுள்ள ஆடு களை இரண்டு கொடுத்தால் கூட பெற்றுக் கொண்டு செல் கின்றோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும், தமிழக அரசு வழங்க கூடிய நலத்திட்ட உதவி களில் அதிகாரிகள்  முறைகேடு செய்வதாகவும், சம்பந் தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக  அரசும் உரிய விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பயனா ளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல் பீகாரைச் சேர்ந்தவரிடம் விசாரணை

திருப்பூர், ஜூன் 25- ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் இருந்து கேரள மாநி லம் ஆலப்புழாவுக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயி லில், ஈரோடு திருப்பூர் இடையே வியாழக்கிழமை இரவு ரயில்வே காவல்துறை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அந்த ரயிலின் எஸ் 7 பெட்டி யில் கழிவறை அருகே 8 கிலோ கஞ்சா பை இருந்தது. அந்தப்  பையை சோதனை செய்த காவல்துறையினர் கஞ்சா இருப் பதை உறுதிப்படுத்தி அதை பறிமுதல் செய்தனர். அத்துடன்  அந்தப் பையை கொண்டு வந்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாளந்தா மாவட்டத்தில் வசித்து வரும் மனோஜ் பஸ் வான் (49) என்பவரை ரயில்வே போலீஸார் பிடித்து வந்த னர். அவரிடம் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அப்புசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாநகராட்சியின்  நுண் உரம் விவசாயிகளுக்கு வழங்கல்

திருப்பூர், ஜூன் 25- திருப்பூர் மாநகராட்சி உரக் கிடங்கில் தயாரித்த நுண் உரத்தினை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி மைய அலுவல கம் அருகில் இந்த நிகழ்ச்சி நடைபெற் றது. அத்துடன் தூய்மை பணிக்கு தேவை யான பிளாஸ்டிக் டிரம் தொட்டிகளை தூய்மை பணியாளர்களுக்கு அவர் வழங்கி னார்.  இதைத் தொடர்ந்து முதல் மண்டலத் தில் 12ஆவது வார்டு சொர்ணபுரி அவென்யூ  பகுதியில் தூய்மை பணிகள் குறித்த விழிப் புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பூலுவப்பட்டி நுண் உரக்கிடங்கில் ஏ.பி.எஸ்.  தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் நுண் உரக்கிடங்கின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். டிராக்டர் ஒப்படைப்பு திருப்பூர் மாநகராட்சி தூய்மை பணிகள்  மேற்கொள்ள ரூ 8 லட்சம் மதிப்பில் டிராக்டர்  வாகனத்தை அக்ஷயா டிரஸ்ட் மாநகராட்சி  பயன்பாட்டிற்கு வழங்கியது. முன்னதாக, சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி  மாணவ மாணவியர்கள் மூலம் தூய்மை பணிகள் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை தொடர்பான விழிப்புணர்வு கலை  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில்  மாநகராட்சி ஆணையாளர், துணைமேயர், மண்டல தலைவர்கள், உதவி ஆணையர் கள், சுகாதார அலுவலர்கள், விவசாயிகள்,  மாணவ, மாணவியர்கள், ஏராளமான பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

;