districts

img

இபிஎப் பென்சன்தாரர்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்

கோவை, மே 31- மூத்த குடிமக்களிடம் பறிக்கப் பட்ட ரயில் கட்டண சலுகையை உட னடியாக ஒன்றிய மோடி அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இபிஎப் பென்சன் தாரர்கள் தபால் அனுப்பும் போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், கவுண்டம் பாளையம், ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே இபிஎப் பென்சன் தாரர்கள் நல சங்கத்தினர் இந்த இயக் கத்தில் ஈடுபட்டனர்.  சங்கத்தின்  மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித் தார். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் தேவேந்திரன், மவுனசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  இதில், பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம், இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படி வழங்க வேண் டும். இபிஎப் பென்சன்தாரர்களுக்கு, இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனை வருக்கும், உயர் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து இவ்வியக்கம் நடைபெற்றது. முன்னதாக, பிரத மர் முகவரிக்கு நூற்றுக்கும் மேற்பட் டோர் தபால்களை அனுப்பி வைத்த னர்.

;