districts

img

தொழில் பாதுகாப்பு மாநாடு - வரவேற்புக்குழு அமைப்பு

கோவை, பிப். 6 - மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் நடைபெற உள்ள  தொழில் பாதுகாப்பு மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. கோவையில் மார்ச் மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதை யொட்டி, இதனை வெற்றிகரமாக நடத்துவதற்கென வர வேற்புக்குழு அமைப்புக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், எம்எஸ்எம்இ  கூட்டமைப்பின் நிர்வாகி கே.பான்டியன் தலைமை தாங்கி னார்.  இதில், கோ இன்டியா அமைப்பின்  துணைத்தலைவர் பால சுந்தரம், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநா பன், திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், எம்எஸ்எம்இ கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் மற்றும் தொழில் முனைவோர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக தொழில் பாதுகாப்பு மாநாட்டு வரவேற்பு குழு கெளரவ தலைவராக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன், தலைவராக டி.பாலசுந்தரம், செயலாளராக கே.பாண்டியன், பொருளாளராக டி.மணி 15 பேர்கொண்ட நிர்வாகிகள் உள்ளிட்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.