districts

img

தேசிய திருநங்கைகள் தின விழா

நாமக்கல், ஏப்.16- நாமக்கல்லில், தேசிய திருநங்கைகள் தின விழா கொண் டாடப்பட்டது. தேசிய திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு, நாமக் கல் மாவட்ட திருநங்கைகள் சார்பாக கொண்டாடப் பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த விழாவில், சாலைகளில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப் பட்ட மற்றும் யாசகம் எடுப்பவர்கள் உள்ளிட்டோர்களை அழைத்து குளிப்பாட்டி, புதுத்துணி அணிவித்து, உணவு கொடுத்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து திருநங்கைகள் தின விழாவை கொண்டாடும் விதத்தில் கேக் வெட்டி அனை வருக்கும் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.