districts

நெல்லை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கான நவீன வசதி

திருநெல்வேலி, ஏப்.28-பல்வேறு குறைகளுக்கு பரிபூரண சிகிச்சை பெற்ற 8 பச்சிளங்குழந்தைகள் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன. நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் மூச்சுத் திணறல், எடை குறைவு, பிரசவநாளுக்கு முன்பு பிறந்த குழந்தைகளை கவனிக்க தனிசிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வார்மர், இங்பேட்டர், ரெகுலர் ஆக்சிஜன் மற்றும் 24 மணி நேரம் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனிடையே நாங்குநேரி, ஆலங்குளம், நெல்லை சந்திப்பு, பாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தபெண்களுக்கு பல்வேறு குறைகளுடன் பிறந்த 8 பச்சிளங்குழந்தைகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனை டீன் கண்ணன் உத்தரவின் பேரில், குழந்தைகள் சிகிச்சை பிரிவுதுறைத் தலைவர் மருத்துவர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடசுப்ரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் 24 மணி நேர கண்காணிப்புடன் தீவிர சிகிச்சைஅளித்து வந்தனர். இவ்வாறு பரிபூரண சிகிச்சையால் 8 குழந்தைகளும் நன்றாகக் குணமடைந்தன. இதையடுத்து ஒரே நாளில் 8 குழந்தைகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து டீன் கண்ணன் கூறுகையில், ‘‘பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஒரே நேரத்தில் எட்டு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து ஒரே நாளில் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளது” என்றார்.

;