districts

img

அரவக்குறிச்சி பகுதியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

கரூர், மே 7-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பள்ளபட்டி பகுதி இஸ்லாமிய மக்களிடம் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இஸ்லாமிய மக்களின் உணர்வுப்பூர்வமான வரவேற்பை ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆதரவாக வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார்.தளவாபாளையம், புகளூர் நான்கு ரோடு, ஆலமரத்துமேடு, புன்னம் சத்திரம், குப்பம், ஆரியூர், நஞ்சைக்காளக்குறிச்சி, ராஜபுரம் ஆகிய பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.