சேலம், பிப். 24- ஜலகண்டாபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விளை யாட்டு கழகத்தின் சார்பாக 33 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவை யொட்டி, 3 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விளையாட்டு கழகம் சார் பில் ஜலகண்டாபுரம் பகுதியில் ஞாயிறன்று மினி மாரத்தான் போட்டி, ஓவியப்போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்க ளுக்கு முதல் பரிசு 2 ஆயிரம், மற்றும் 1500, 1000, 500 என அடுத்தடுத்த பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை வாலிபர் சங்கத்தின் நிர் வாகிகள், பி.பாலசுப்பிரமணியம், கே.கணே சன், வெற்றிவேல் ஆகியோர் ஒருங்கிணைத் தனர். இதில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணவேணி, மாதர் சங்க நிர்வாகிகள் கே.ராஜாத்தி, ஜி.கவிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்திப்பேசி னர். முடிவில், பி.கே.சீனிவாசன் நன்றி கூறி னார்.