districts

மாநகராட்சி பள்ளிகளில் 604 மாணவர்கள் இடைவிலகல் கவுன்சிலர்களுக்கு மேயர் தினேஷ்குமார் வேண்டுகோள்

திருப்பூர், மே 31 - திருப்பூர் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 604 மாணவர் கள் இடை விலகியுள்ளனர். கல்வி முக்கியம்  என்பதால் இடை விலகல் மாணவர்களை தொடர்பு கொண்டு சேர்ப்பதற்கு அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் முயற்சி செய்ய வேண் டும் என்று மேயர் ந.தினேஷ்குமார் கூறி னார். திருப்பூர் மாமன்றக் கூட்டத்தில் செவ்வா யன்று இது குறித்து அவர் பேசுகையில், ஒவ் வொரு பகுதி வாரியாக பள்ளி வாரியாக  மாணவர்கள் இடை விலகிய விபரம் உள் ளது. திருப்பூர் தொழில் நெருக்கடி, வேலை யின்மை காரணமாக சொந்த ஊருக்குச் செல் வது உள்பட பல்வேறு காரணங்களால் மாண வர்கள் நின்றிருக்கலாம். சொந்த ஊருக்குச் செல்வோர் பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் இங்கேயே வேறு காரணங்களால் பள்ளிகளில் தொடராமல் இடை விலகிய மாணவர்கள் இருந்தால் அவர்களது பெற் றோரைத் தொடர்பு கொண்டு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர அந்தந்த கவுன்சி லர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பணியாளர் சீருடை இக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி யின் கவுன்சிலர் ஆர்.மணிமேகலை கூறுகை யில், நான்காவது குடிநீர் திட்டம் மற்றும் விடு பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட் டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித் தார். மேலும் குடிநீர் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு வருடமாக சீருடை வழங்கப் படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனே சீருடை வழங்க வேண்டும். மேலும் பல இடங் களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள் ளதை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த மேயர் தினேஷ்குமார், பணியாளர்களுக்கு சீருடை களை அவுட்சோர்சிங் நிறுவனங்கள் தர வேண்டும். அவர்களிடம் பேசி உடனடி யாக சீருடை தரச் சொல்கிறோம், என்றார். குமாரசாமி நகர் பொதுக் கழிப்பிடம் பழுத டைந்த நிலையில் உள்ளது. குழாய்கள் உடைந்துள்ளன. அவற்றை விரைந்து சீர மைத்துத் தர வேண்டும் என்று 16ஆவது வார்டு  கவுன்சிலர் கேட்டுக் கொண்டார்.

மதிமுக கவுன்சிலர் ஆர்.நாகராஜ் பேசும் போது, மாநகராட்சி பள்ளிகளில் தொழி லாளர் வீட்டு பிள்ளைகள் சென்றால் சேர்த்துக்  கொள்வதில்லை. கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தால் தகுதியான மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாந கராட்சி நிர்வாகம் உரிய தலையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் துளசிமணி பேசும்போது, பழனிச்சாமி நகரில்  சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண  வேண்டும் என்றார். பாஜக கவுன்சிலருக்கு பதில் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவ மனைக்கு முன்பாக சந்திராபுரம் பிரிவில் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் இருப் பதை சரி செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர் தங்கராஜ் கூறினார். இது தேசிய  நெடுஞ்சாலை ஆக இருப்பதால் மாநகராட்சி  வேலை செய்ய முடியாது, அவர்களிடம் இப் பிரச்சனையை சரி செய்ய சொல்லி இருப்ப தாக மேயர் கூறினார். ஆனால் எப்படியா வது சரி செய்ய வேண்டும் என்று தங்கராஜ் கூறினார். இதையடுத்து பேசிய மேயர், உங் கள் ஒன்றிய அரசின் துறைதான் தேசிய நெடுஞ் சாலைத் துறை. அவர்களிடம் பேசி உடனடி யாக சரி செய்யச் சொல்லுங்கள் என்றார்.  எனினும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால்  நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தி  வருகிறோம். கடந்த ஆண்டு நிதியில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்த ஆண்டு நிதி  ஒதுக்கி நகரில் 23 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தருவதாக கூறியிருக்கிறார்கள் என்று மேயர் கூறினார்.

;