districts

img

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக: சிஐடியு

சேலம், மார்ச் 25- மின்வாரியத்தில் ஒப்பந்த முறை யில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு பொது கட்டுமான சங்கத்தின் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.  சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பின் துணை அமைப்பாக சேலம் பொது கட்டுமான வட்டம்  கிளை துவக்க விழா நடைபெற்றது. சேலம் மின் திட்ட கிளை செயலா ளர் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில்,  செயலாளர் ரகுபதி வரவேற்புரை யாற்றினார். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஆர்.ரவிக்குமார் துவக்க உரையாற்றினார். இதில், மின் ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ஊக்கப்படுத்தும் வாரிய உத்தரவு 2-ஐ நீக்க வேண்டும். ஒப் பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண் டும். மின்சார வாரியத்தில் காலியாக  உள்ள 58 ஆயிரம் காலிப்பணியிடங் களை நிரப்பி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்த வேண்டும். 2022 மின்சார மசோ தாவை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பேரவையில் மாநில துணைத் தலைவர் வி.இளங்கோ, மண்டல செயலாளர் ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற் றினர். இதைத்தொடர்ந்து பொது கட் டுமான சங்கத்தின் வட்ட சேலம் கிளை தலைவராக கருப்பண்ணன், செய லாளர் வெங்கடேஷ், பொருளாளர் முனுசாமி உள்ளிட்டு 20 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

;