districts

img

கோவையில் லுலு மால் - இன்று திறப்பு

கோவை, ஜூன் 13- கோவை, லட்சுமி மில் வளாகத்தில் இன்று (புதனன்று)  லுலு மால் திறக்கப்படுகிறது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமை இடமாக கொண்ட  இந்த லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் தனது வணிகத்தை கோவையில் தான் முதன் முதலாக தொடங்குகிறது. இந்தி யாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ளது. தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் சென் றிந்தார். அப்போது லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியில் முதலீட்டை செய்வதற்க்கான ஒப்பந்தம் செய் துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை யில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைய திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில் வளாகத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம்  சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. லுலு மால் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு  விருந்தினராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  கலந்து கொண்டு திறந்து வைக்கிறார் என லுலு நிறுவனத்தின்  தென்னிந்திய செய்தித் தொடர்பாளர் மணி ஷங்கர் தெரிவித் தார்.