districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பெண்களுக்கு கடனுதவி  நீலகிரி மாவட்டத்திற்கு 2 ஆம் இடம்

உதகை, மார்ச் 9- சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் நீலகிரி  மாவட்டம் 2 ஆவது இடத்தில் உள்ளது என மாவட்ட ஆட்சி யர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு  மையத்தில் மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கும், அரசு அலுவலர்களுக்கும்  மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பரிசு மற்றும் கேடயங் களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நீலகிரி மாவட் டத்தில் சுமார் 6 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்த  குழுக்கள் சுய தொழில் மற்றும் பல்வேறு தொழில் தொடங்குவ தற்காக கடந்தாண்டு ரூ.300 கோடி அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு கடனுதவிகள் வழங் குவதில் மாநிலத்திலேயே நீலகிரி மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டில் கூடுதலாக ரூ.50 கோடி மதிப்பில் சுய உதவிக் குழுக்களுக்கு  கடனுதவிகள் வழங்க உள்ளோம், என்றார். மகளிர் தினத்தை ஒட்டி உதகை, குன்னூர், கோத்தகிரி,  கூடலூர் ஆகிய நான்கு வட்டாரங்களில் அங்கன்வாடி பணி யாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவு வகைகள்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கௌதம், வருவாய் அலு வலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி உள்ளிட்ட திர ளனோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை

கோவை, மார்ச் 9- முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 11 ஆம் தேதியன்று (நாளை) கோவை வருகை தருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 11 ஆம் தேதி யன்று (நாளை) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து  விமானம் மூலம் கோவை வருகிறார். பல்வேறு நிகழ்வுகளில்  பங்கேற்க உள்ள அவர், மாலை 5 மணிக்கு கருமத்தம்பட்டி யில் நடைபெற உள்ள விசைத்தறியாளர்கள் பாராட்டு விழா வில் கலந்து கொள்கிறார். இந்த விழா முடிந்ததும் இரவு 8 மணிக்கு விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல் கிறார்

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:33.72/60அடி நீர்வரத்து:778கன அடி
வெளியேற்றம்:1125கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:52.92/90அடி.நீர்வரத்து:10கனஅடி
வெளியேற்றம்:151கனஅடி

அடிப்படை வசதி பணிகளுக்காக ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு

தாராபுரம், மார்ச் 9 - தாராபுரம் ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட் டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி  செந்தில்குமார் தலைமை வகித்தார். வட் டார வளர்ச்சி அலுவலர்கள் பானுப்பி ரியா மற்றும் கே.கே.ஜீவானந்தம் (ஊராட்சிகள்), துணைத் தலைவர் ஈ.சசி குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அப்போது கூட்டத்தில் மொத்தம் 33  தீர்மானங்கள் மன்ற பொருளாக வைக் கப்பட்டது. அதில் தார் சாலை அமைத் தல், பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல்,  புதிய பைப் லைன் அமைத்தல், சுற்றுச்சு வர் கட்டுதல் மற்றும் சாக்கடை கட்டு தல் உள்ளிட்ட 16 பணிகளுக்கு ரூ.90  லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இக்கூட்டத்தில் உதவி பொறியாளர்  ரஞ்சித் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ணன், ஒன் றிய கவுன்சிலர்கள் சிலம்பரசன், கலைச் செல்வி, தெய்வசிகாமணி, பழனிச் சாமி, தேவநாயகி, லட்சுமி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

போலி பப்பாளி விதைகள் விநியோகித்த தோட்டக்கலைத்துறை

முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் புகார்

திருப்பூர், மார்ச் 9 - தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத்  துறை மூலம் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய விலையில் லாத பப்பாளி விதைகள் போலியாக இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் முதல்வருக்கு புகார் கடிதம்  அனுப்பியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் இது குறித்து முத லமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி  உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் திருப்பூர் மாவட்டத்தில் காய்கறி, பழ வகை விதைகள் விலை யில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் காய்கறி நாற்றுகள் விடப் பட்டு வழங்கி வருகின்றனர். 2023  ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்  தோட்டக்கலைத்துறை மூலம் திருப்பூர்  மாவட்டத்தில் பப்பாளி விதை வழங்கி யுள்ளனர். இவ்விதையை தைவான்  நாட்டு நிறுவனமான நோ யூ சீட் இந்தியா  பிரைவேட் லிமிடெட் என்ற தனியார்  நிறுவனத்தின் விதையான “பப்பையா  ரெட் லேடி பை ஹைபிரிட்” என்ற ரக  விதை வழங்கி உள்ளனர். இந்த ரகம்  சுவை மற்றும் உற்பத்தி திறன் கொண்ட சிறந்த ரகமாக கருதப்படுகி றது.  இந்தியாவில் பெரும்பகுதியான விவசாயிகள் இந்த ரக பப்பாளி பயிரிட்டு  வருவதாக தெரிய வருகிறது.  ஆகவே இந்த விதை சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கி வரும் திட்டம்  பயனுள்ள திட்டமாக அமைந்து இருக் கிறது. ஆனால் மேற்கண்ட நிறுவனம்,  விதையின் உண்மைத் தன்மை அறிய  “க்யூ ஆர் கோடு” விதையின் பாக்கெட் டின் மேல் பதிவிட்டு உள்ளது. அதன் மீது  தேய்த்து ஸ்கேன் செய்தால் பாக்கெட் டில் உள்ள விதை சரியானது எனத் தெரி விப்பதுடன், விவசாயியின் விபரங்க ளைப் பதிவிட கோருகிறது. தனியார்  கடைகளில் வாங்கிய விதைகளில் மேற் காண் வகையில் விதையை ஸ்கேன்  சோதனை செய்து அறிய முடிகிறது.  ஆனால் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை  துறை மூலம் வழங்கியுள்ள மேற்கண்ட  நிறுவன விலையில்லா பப்பாளி விதை கள் பாக்கெட்டில் உள்ள க்யூ ஆர் கோட்  மீது ஸ்கேன் சோதனை செய்தால்  ஸ்கேன் ஆவது இல்லை. இது பற்றி சம் பந்தப்பட்ட நிறுவனத்தில் கேட்டால் போலி விதைகள் என்கின்றனர்.

வைரஸ் நோய் தாக்குதல்

திருப்பூர் மாவட்டத்தில் 2021 - 2022  ஆகிய ஆண்டுகளில் பயிரிட்ட தோட் டக்கலை பயிர்களான பீர்க்கன்,புடலை, மிளகாய், தக்காளி ஆகியவற்றில் வைரஸ் நோய், பழ ஈ தாக்குதல்  ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும்  பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் பப்பாளியில் வைரஸ்  நோயும், வாடல் நோய், இலைக்கருகல்  நோய் என்று தொடர்ச்சியாக நோய்  தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் நஷ் டம் அடைந்து வருகின்றனர். சமீபத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் வைரஸ் போன்ற நோய்கள் விதையில்  இருந்து கூட வரலாம் என்று தெரிவித் துள்ளனர். விதையின் உண்மை தன்மை  அறிந்து பயிரிட பரிந்துரை செய்துள்ள னர். பப்பாளி பயிரிட்டு ஏக்கருக்கு ஒரு  லட்சம் செலவு செய்து ஐந்து மாதங்க ளுக்குப் பின் பலன் தரும் என்பதால் போலி விதைகள் விவசாயிகளை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். தமிழ்நாடு அரசின் தோட்டக் கலை  துறை மூலம் வழங்கி உள்ள மேற்காண்  ரெட் லேடி என்று சொல்லக்கூடிய பப் பாளி விதை போலியானதாக இருப் பதை அதனுடைய க்யூ ஆர் கோடு  ஸ்கேன் சோதனையில் தெரியவரும்  நிலையில், தோட்டக்கலை துறை மூலம்  திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட் டுள்ள பப்பாளி விதையை விவசாயி கள் பயிர் செய்தால் பாதிப்புக்கு உள்ளா கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற் காணும் விதைகளை முழுமையாக  திரும்பப் பெற்று, பயிர் செய்து பாதிப் படையும் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட  ஈடு வழங்கி உதவும்படியும், வரும் காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுத்திட மேற்கண்ட விதைகளைக் கொள்முதல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி

ஈரோடு, மார்ச் 9- சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங் கேற்க 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண் காணிப்பாளர் கருணாகர பிரபு வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது, “நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ” என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உலகெங்கிலும்  உள்ள அனைத்து சாலைகளை குழந்தைகளுக்கு பாதுகாப் பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம். உங்கள் இலக்கை  அடைய என்னென்ன சக்திகள் தேவை என்பதை விளக்கி ஒருவர் ஒரு கடிதம் எழுதலாம். கட்டாயமாக, 15 வயதுக்கு உட் பட்டவர்கள் மட்டும் இதில் பங்கேற்க வேண்டும். 800 வார்த்தை களுக்கு மிகாத  கடிதமாக எழுத வேண்டும். ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் எழுதலாம். இப் போட்டியில் சர்க்கிள் அளவில் முதல் 3 பரிசு பெறுவோருக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரமும், சர்வ தேச அளவிலான போட்டியில் முதல் 3 பரிசு பெறுவோருக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரமும் பரி சாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும். அதற்கான விண்ணப்பத்துடன், ஒரு புகைப்படம், பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங் கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், எஸ்பிஓ – ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001 என்ற முகவரியில் வரும் மார்ச் 13 ஆம் தேதிக் குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேலும், விபரங்க ளுக்கு இந்திய அஞ்சல் துறையின் www.indiapost.gov.in  தளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.