districts

img

மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது

கோவை, ஜூன் 24–  திருப்பூரில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 950 மது பாட்டில்கள் மற்றும் 1 லட்சம் ரூபாயை போலீசார் பறி முதல் செய்தனர். ஊரடங்கு காரணமாக கோவை உட்பட 11 மாவட்டங் களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் அண்டை மாநிலங்களிலிருந்து மதுவை கடத்தி அதிக விலைக்கு விற் பது தொடர்ந்து நடந்து வரு கிறது. இதேபோல் கர்நாடகா வில் இருந்து மது பாட்டில் களை கடத்திவந்து திருப்பூர் பகுதியில் விற்பனை செய் யப்படுவதாக திருப்பூர் போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்த னர்.

அப்போது அங்கு ஒரு குடோனில் 4 ஆயிரம் மது பாட்டில்கள்  பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரி யவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறி முதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 வாலிபர்கள் மதுபாட்டில் களை காரில் கடத்தி வருவ தாக தகவல் கிடைத்ததைய டுத்து திருப்பூர் போலீசார் கோவை போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். போலீ சார் திருச்சி ரோட்டில் புத னன்று இரவு வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப் போது ராமநாதபுரம் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை செய்த போது காரில் இருந்தவர்கள் முன் னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.  

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர் 950 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் மதுபாட்டில் கள் கடத்தி வந்த முத்துக் குமார் (39), பிரேம் (26), கோபாலகிருஷ்ணன் (30), சூரியா (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் காரில் கடத்தி வந்த 950 மது பாட்டில்கள் மற்றும் பணம் ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்தனர்.

;