கோவை, பிப்.23- ‘சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்’ எனும் தலைப்பில் ததீஒமு மற்றும் தமுஎகச சார்பில் மக்களுடன் உரையாடல் நிகழ்வு புலியகுளத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், ‘சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்’ எனும் தலைப் பில் மக்களுடன் உரையாடல் நிகழ்வு சனியன்று மாலை கோவை மாவட்டம், புலியகுளம், பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட துணைச்செயலாளர் த.நாகராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பி.ஜோதிகுமார் வரவேற்றார். தமுஎ கச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்டச் செயலாளர் அ.கரீம், ஒருங்கிணைப்பாளர் வி.சுரேஷ், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் இரா.ஆறுச் சாமி, மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் கே.ரத்தினகுமார் நன்றி கூறி னார்.