districts

img

சேந்தமங்கலத்தில் ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

நாமக்கல், மே 31- சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலு வலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) புதனன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5  ஆவது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்திற்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமை வகித் தார். இதில் சேந்தமங்கலம், கோணங் கிப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, பாலப் பட்டி, போடிநாயக்கன்பட்டி, எஸ். பழையபாளையம், சிவநாயக்கன் பட்டி, அக்ரஹார பழையபாளையம், கெஜக்கோம்பை, புதுக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு  உள்ள பட்டா மாறுதல், முதியோர் உத வித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை உட் பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 111 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதன்பின் மனுக்களுக்கு தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக வியாழ னன்று சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூசூர், பெருமாப் பட்டி மேற்கு, பெருமாப்பட்டி கிழக்கு, கெஜல்நாயக்கன்பட்டி, பொம்மசமுத் திரம் அக்ரஹாரம், ரெட்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தில் சேந்தமங்க லம் வட்டாட்சியர் செந்தில், வட்டாட்சி யர் (பொது மேலாளர்) அரவிந்த், வட் டாட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அப்பன் ராஜா, கிராம நிர்வாக அலு வலர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;