districts

img

மிரட்டும் அரசு அதிகாரிகள் - பொதுமக்கள் ஆட்சியரிடம் முறையீடு

பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அரைக்கும் ஆலைக்கு எதிர்ப்பு

உதகை, நவ.12- பிளாஸ்டிக் கழிவு பொருட் களை அரைக்கும் ஆலை அமைவ தற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அர சின் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்காது என அரசு அதிகாரி கள் மிரட்டுவதாக கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக, குன்னூர் உட்பட்ட கொலக்கம்பை அருகே உள்ள தைமலை, மேல் தைமலை,  அம்பேத்கர் நகர், கோட்டக்கல், பழனியப்பா எஸ்டேட் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த நூற்றுக் கும் மேற்பட்டோர்  திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங் கள் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊரில் சாலை வசதி, ரேசன் கடை, பேருந்து வசதி, சுடு காடு வசதி, குடிதண்ணீர் உள் ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. இது சம்பந்தமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மனுக்கள் கொடுத் தும், அதிகாரிகளை நேரில் சந் தித்தும்  முறையிட்டு வருகிறோம். ஆனால் எந்த அதிகாரியும் நடவ டிக்கை எடுக்கவில்லை. 

இச்சூழலில் தற்போது பொது மக்களுக்கும், எங்களது குழந்தைக ளுக்கும் உடல்நலத்தை  பாதிக்கும் வகையில் அமையவுள்ள பிளாஸ் டிக் கழிவு பொருட்களை அரைக் கும் தொழிற்சாலையை தொடங் குவதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன. இதையொட்டி   அதி காரிகள் பலர் எங்கள் ஊருக்கு தொடர்ச்சியாக வருகை புரிந்து வருகின்றனர். மேலும், அவர்கள் எங்கள் கிராமத்தை தத்தெடுத் துள்ளதாகவும், 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறு கின்றனர்.  அதேநேரம், இந்த தொழிற் சாலையை செயல்படுத்த அனு மதிக்காவிட்டால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் செயல்ப டுத்த மாட்டோம் என்று‌ அதிகாரி கள் மிரட்டுகிறார்கள். ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது டன், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அரைக்கும் தொழிற்சாலை அமை வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

;