சேலம், பிப்.13- சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி வார்டில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஞாயிறன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சி, 24 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட் பாளர் க.நிர்மலா கனகராஜுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்குசேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாவட்ட தலை வர் பன்னீர்செல்வம், செயலாளர் டி.உதய குமார், உதவித்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கட பதி, மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப் பினர் பி.பாலகிருஷ்ணன், மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி, அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க பொதுச்செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார்,
சாலை போக்கு வரத்து சங்க மாவட்ட செயலாளர் பி.முரு கேசன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், திமுக இளைஞரணி தலைவர் பார்த்திபன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஏ.பி.பாஸ்கரன், துணைத்தலைவர் தாரை.ராஜகணபதி, இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். சேலம் மாநகராட்சி 19 ஆவது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சி வேட்பா ளர் மா.கலைவானிக்கு ஆதரவாக சிஐடியு வினர் தீவிர வாக்குசேகரிப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இதில், ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் உதயகுமார், விசைத் தறி தொழிலாளர் சங்க செயலாளர் பி.சந்தி ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூர் நகராட்சி 9 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.கருப்பண்ணனுக்கு வாக்கு கேட்டு, சிஐ டியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பி.இளங்கோ, மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தன் உள்ளிட்டு பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கன்னங்குறிச்சி பேரூராட்சி 13 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தேவி பழனிச்சாமிக்கு வாக்கு கேட்டு, திமுக செயலாளர் எம்.மகேந்திரன், மதிமுக ஹரி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். சேதுமாதவன், டி.பரமேஸ்வரி, ரகுபதி, தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் பேரூராட்சி 8 ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகேஸ் வரி செல்லதுரையை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் தாலுகா செயலாளர் ஈஸ் வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.