districts

img

கொசு ஒழிப்பு புகை தெளிப்பான் திருப்பூர் மாநகர ஆணையர் ஆய்வு

திருப்பூர், பிப். 24 - திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு  ஒழிப்புக்கு பயன்படுத்தப்படும் புகை தெளிப்பான் இயந்திரங் களை மாநகர ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருப்பூர் மாநகரில் நான்கு மண்டலங்களில் மொத்தம் 33  கொசு ஒழிப்பு கை புகை தெளிப்பான்களும், மண்டலத் திற்கு ஒன்று வீதம் நான்கு புகை போக்கி இயந்திரங்களும் உள் ளன. சுமார் 40 பணியாளர்கள் இந்த இயந்திரங்களை கையாள வும், கொசு ஒழிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  இந்த இயந்திரங்களைப் பார்வையிட்ட ஆணையர் பவன்கு மார், அவற்றை முறையாக பராமரித்து, கொசு ஒழிப்பு பணி கள் தொய்வின்றி தொடர வேண்டும் என்று கூறினார். மாநகர  நல அலுவலர் கௌரி சரவணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.