districts

img

சனத்குமார் நதியை தூர்வாரிடுக

தருமபுரி, அக்.23- சனத்குமார் நதி தூர்வா ரும் பணியை உடனடியாக துவங்க வேண்டுமென சிபி எம் தருமபுரிய ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தருமபுரி ஒன்றிய 23  ஆவது மாநாடு தருமபுரியில் தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. ஒன்றி யகுழு உறுப்பினர் ஜி.வெங்கட்ராமன் கட்சியின் செங்கொ டியை ஏற்றி வைத்தார். மாவட்டசெயற்குழு உறுப்பி னர் பி.இளம் பரிதி துவக்கிவைத்து பேசினார். ஒன்றியச்  செயலாளர் என்.கந்தசாமி அறிக்கையை முன்வைத்து பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளராக என்.கந்தசாமி  உட்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து நிறை வுறையாற்றினார். முன்னதாக, இம்மாநாட்டில் சனத்குமார் நதி தூர்வாரும்  பணியை துவக்க வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்பாதைகளை அகலப்படுத்தி சிறுகுறு விவசா யிகளை பாதுகாக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை மற்றும் நாள்  ஒன்றுக்கு ரூ.600 கூலியாக வழங்க வேண்டும். இத்திட்டத்தை  விவசாய பணிகளுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

;