districts

img

கட்டிமுடித்து திறக்கப்படாத நகர்நல மையத்தை திறக்க வலியுறுத்தி மேயரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திருப்பூர், பிப்.7- திருப்பூர் மாநகராட்சியில் கட்டி  முடித்துத் திறக்கப்படாத நகர்நல மையத்தை உடனடியாகத் திறப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வெள்ளியன்று மேயரைச் சந்தித்து வலியுறுத்தினர். திங்க ளன்று நேரில் வந்து ஆய்வு செய்வ தாக மேயர் உறுதியளித்தார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அங்கேரிபாளையம் பகுதி கிளைகள் சார்பில் மாநகராட்சி மேயர்  ந.தினேஷ்குமாரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, 15ஆவது  வார்டுக்கு உட்பட்ட அவிநாசிகவுண் டம்பாளையம் பகுதியில் கட்டி முடிக் கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நகர் புற நல வாழ்வு மையத்தை உடனடி யாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேட்டுப்பா ளையம் குடிநீர் இரண்டு நாட்களுக்கு  ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும், குழியு மாக உள்ள சாலைகளை சீரமைத்து கான்கிரீட் சாலை அமைக்க வேண் டும், பழுதடைந்துள்ள சாக்கடை களை உடனடியாக சரி செய்ய வேண் டும். விடுபட்ட வீதிகளில் சாக்கடை பணிகளை முடித்து தர வேண்டும். ஏவிபி லே அவுட் பகுதியில் 4ஆவது  குடிநீர் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும். நியாய விலைக்கு  சொந்தமாக கட்டிடம் கட்டி தர வேண் டும். 9ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏஎஸ்எம் காலனி, துண்டுக்காடு, மேற்கு கிழக்கு ஏடி காலனி சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் விநி யோகம் முறையாக விநியோக்க  வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மேயர் ந.தினேஷ்குமார், திங்க ளன்று அங்கேரிப்பாளையம் பகுதி யில் நேரடியாக ஆய்வு செய்வதாக வும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை  தண்ணீர் வினியோகிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாந கரில் திறக்கப்படாமல் உள்ள நகர்ப் புற நல வாழ்வு மையங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் எடுக் கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் நகர்ப்புற வாழ்வு மையம்  மக்கள் பயன்பாட்டிற்கு வரும். விடுப் பட்டுள்ள பகுதிகளில் பாதாள சாக் கடை அமைப்பது தொடர்பாக விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச்  செயலாளர் ஆர்.காளியப்பன், முன் னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப் பன், கிளை செயலாளர்கள்  நரேந் திரபிரசாத், கதிர்வேல், ராஜேஷ் மற் றும் ராக்கிமுத்து, உள்ளிட்ட பொது மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.