districts

img

இருப்பதோ 1433 இடங்கள், விண்ணப்பங்களோ 34 ஆயிரம்!

தனியார் பள்ளிகளில் தங் களது பிள்ளைகளை சேர்ப்ப தில் தான் பெருமை என நினைக்கும் பெரும்பாலான பெற் றோர்கள், கல்லூரியில் மாணவர் களை சேர்த்த வேண்டும் என எண் ணுகையில், தனியார் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை அறிந்து, அரசு கல்லூரிகளில் சேர்ப்பதற்குத்தான் முயற்சி மேற்கொள்கின்றனர்.  தற்போது, அரசு பள்ளிகளில் குழந் தைகளை சேர்ப்பது அதிகரித்திருந்தா லும், தனியார் நிறுவனங்களின் மீதான மோகம் பெற்றோர்களிடையே குறையவில்லை. அரசு கல்வி நிலை யங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிற போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தா லும், கற்பிக்கும் திறன் போன்றவை கள் தனியார் கல்லூரிகளை காட்டி லும் அரசு கல்லூரிகளில் மேம்பட்டே இருக்கிறது எனலாம். மேலும், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்க ளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், எதனையும் எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும் என்பதும் சவாலான சமூ கத்தில் மிக முக்கியமானதாகும். 

பழமையான கல்லூரி

1852 ஆம் ஆண்டில் ஆங்கிலத் தைத் தாய் மொழியாகக் கொண்டவர் களுக்கான பள்ளியாக தற்போதுள்ள கோவை அரசுக்கல்லூரி தொடங்கப் பட்டது. இதன்பின் 1861 ஆம் ஆண்டில் இப்பள்ளி ஓர் இடைநிலைப் பள்ளி யாக மாறியது. அதன்பிறகு, 1867 ஆம்  ஆண்டில் ஓர் உயர்நிலைப் பள்ளியா கத் தரம் உயர்வு பெற்றது. தொடர்ந்து 1868 ஆம் ஆண்டு முதல் இளங்கலை படிப்பிற்கு முன்னதான துவக்கக் கலை வகுப்புகள் தொடங்கப்பட்டன.  1870 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை கல் லூரியாக உயர்த்தப்பட்டது. சென்னை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முன்னரே 1964 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி முதுகலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. கோவை அரசு கலைக்கல்லூரி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மிகத்தொன்மையான கல்வி நிலை யங்களில் ஒன்றாக, தன்னாட்சித் தகுதி பெற்ற இக்கல்லூரி, பாரதியார் பல் கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி யாக உள்ளது. 

அப்படி என்ன சிறப்புகள்?

இக்கல்லூரியின் மாணவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தி லும் கலந்து கொண்டனர் என் பது குறிப்பிடத்தக்கது. தற்போ தும் தேசிய அளவிலான பிரச் சனைகளுக்கு எதிராக இக்கல் லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஒன்றிய மனித வளத்துறை அமைச்சகம் வெளி யிட்ட பல்கலைக்கழகங்கள் மற் றும் கல்லூரிகளுக்கான தரவரி சைப் பட்டியலில் இக்கல்லூரி 33 ஆவது இடம் பிடித்தது. தலைசிறந்த மேற்கு மண் டல கல்லூரிகளில் சிறந்த கல் லூரிக்கான விருதை நியூஸ் 18 செய்தி நிறுவனத்திடமிருந்து 2022 ஆம் ஆண்டு இக்கல்லூரி யின் அப்போதைய முதல்வர் கலைச்செல்வி பெற்றார். கல்லூரியில் படிக்கும் மாண வர்களுக்கு இலவசமாக ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி வழங்கி வரும் அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், ஆனந்த விகடன் விருது பெற்றார். நடப்பாண்டில் ஆனந்த விக டன் நிறுவனம் நடத்திய ஆய் வில், தமிழ்நாட்டில் சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை அரசு கலைக்கல்லூரி 10 ஆவது இடம் பிடித்துள்ளது.  பல்வேறு விளையாட்டு போட்டி களில் தொடர்ச்சியாக கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் கள் வெற்றி பெற்று வருகின்ற னர். இப்படி பல பெருமைகளை கொண்டது கோவை அரசு கலைக்கல்லூரி. 

குவியும் விண்ணப்பங்கள்:

ஆண்டுதோறும் இக்கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி 2023 ஆம் கல்வியாண்டில் கோவை அரசு கலைக்கல்லூரியில் 1,433 இடங்க ளுக்கு, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் சிறப்பு பிரிவினர் (விளையாட்டு, மாற் றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்) என்று ஏற்க னவே (திங்களன்று) 100 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. கடந்த செவ்வா யன்று முதல் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்று வருகிறது. 3 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக் கல்லூரியில் விண்ணப்பத்துள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர் களாக உள்ளனர். கிராமப்புற மாணவர்களை அனைத் திலும் திறம்பட செய்து வருவதில் இக் கல்லூரி சிறந்து விளங்கி வருகிறது. மேலும், தங்களது வாழ்க்கையில் மட்டுமின்றி, சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகை யில், அதற்கான பயிற்சிகளை இக்கல் லூரி வழங்கி வருகிறது என்றால் மிகை யல்ல. கொரோனா காலத்தில் இக் கல்லூரியின் மைதானத்தில் கொரோனா சிறப்பு சிகிக்சை வார்டுகள் ஏற்படுத் தப்பட்டு, ஏராமானோருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள் மேம்பட வேண்டும்

அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் உள்ள நிலையில், அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. மாணவிகளுக்கு இலவச நாப்கின் மற்றும் நாப்கின் எரியூட்டி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 3  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இக்கல்லூரி யில் ஒரே ஒரு தண்ணீர் தொட்டி மட் டுமே உள்ளது. அப்போது இத்தொட்டி யில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தங்கு தடை யின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகை யான விளையாட்டுகளை ஊக்குவிக் கும் இக்கல்லூரியில், விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என்பது ஒரு குறையாகவே கருதப்படுகிறது. கோவையில் ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றினை கோவை அரசுக்கல்லூரி பின்னுக்கு தள்ளி பெரும்பாலான மாணவர்களை ஈர்த்து வருகிறது. மேலும், புதிதாக தொடங்கப்பட்ட புலியகுளம் பகுதி யில் செயல்பட்டு வரும் கோவை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஏராள மான மாணவிகள் விண்ணப்பித்துள்ள தும் குறிப்பிடத்தக்கது.

-விளாடிமிர் பீட்டர்

 

;