districts

img

தங்கம் வென்று சாதனை

அவிநாசி, ஜூன் 6- தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், அவினா சியைச் சேர்ந்த 27 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்று  ஒட்டு மொத்த சாம்பியன்சிப் வென்று சாதனை படைத்துள்ள னர். தேசிய அளவிலான ஹீரோ கப் சிலம்பாட்ட போட்டிகள் கோவாவில் ஜூன் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 200 மாணவ  மாணவிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் பங்கேற்றதில்  அவிநாசியை சேர்ந்த கோதாமுத்து வாத்தியார் அவிநாசியப் பர் நினைவு உடற்பயிற்சி சாலையைச் சேர்ந்த 27 மாணவ  மாணவிகள் 8, 10, 12, 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில்  தனித்தனியே தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மேலும் மாநிலங்களிலேயே அதிகப்படியான புள்ளிகள், தங்கப்பதக்கங்கள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பி யன்சிப் பதக்கம் பெற்றனர். இதையடுத்து, சனிக்கிழமை இரவு அவிநாசி வருகை தந்த, சிலம்பாட்ட ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன், தேவ அரசு, மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்குப் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.