districts

img

ஒரு ரூபாயில் வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு?

2024 – 25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா 
சீதாராமன் மக்களவையில் செவ்வாயன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்
ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு தெரியுமா?

வரவு
ஒன்றிய அரசின் வருவாயைப் பொருத்தவரை ஒரு ரூபாயில் கடன் மூலம் 27 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது. அடுத்ததாக வருமான வரியாக 19 காசுகள் கிடைக்கின்றன. ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் மூலம் 18 காசுகளும், பெரு நிறுவன வரியாக 17 காசுகளும், வரி அல்லாத வருவாயாக 9 காசுகளும் வரு
வாயாக கிடைக்கின்றன. மத்திய கலால் வரியாக 5 காசுகளும், சுங்க வரியாக
4 காசுகளும், கடன் அல்லாத மூலதன வருவாயாக ஒரு காசும் கிடைக்கிறது.

செலவு
ஒன்றிய அரசின் செலவை பொருத்தவரையில் ஒரு ரூபாய் அடிப்படையில் அதிகபட்சமாக மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடாக 21 காசுகளும், வட்டிக்கு 19 காசுகளும் செலவாகின்றன. ராணுவம் அல்லாத ஒன்றிய அரசு திட்டங்க
ளுக்கு 16 காசுகளும், இதர செலவுகள் மற்றும் நிதி ஆணைய பரிவர்த்தனைக
ளுக்காக தலா 9 காசுகளும் செலவழிக்கப்படுகின்றன. இதை தவிர ராணுவத்திற்கு
8 காசுகளும், மானியத்திற்கு தலா 6 காசுகளும் செலவழிக்கப்படுகின்றன.