சேலம், செப்.4- சேலம் அரசு மருத்துவ மனையில் பொது மக்களை ஆபாச வார்த்தை களால் திட்டிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளார். சேலம் அரசு மருத்துவ மனைக்கு தினமும் ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல் கின்றனர். சேலம், நாமக் கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து ஏராளமானோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரு கின்றனர். மருத்துவமனை முழுவதும் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களை கண் காணிக்கவும், நோயாளிகளை பார்க்க வருபவர்களை குறிப்பிட்ட நேரம் தவிர மருத்துவமனைக்குள் செல்லாமல் இருக்க கண்காணிக்க 300க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். பத்மாவதி தனியார் நிறுவனம் துப்புரவு பணியாளர்களையும், காவலர்களையும் நியமித்து கண்கா ணித்தும் வருகிறது. இந்நிலையில் காவலர் அர்ஜூனன் என்பவர் செவ்வாயன்று பிரசவ வார்டில் பணியில் இருந்தார். பகல் ஒரு மணியளவில் பொதுமக்கள் சிலர் பிரசவ வார்டுக்குள் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அர்ஜுனன் அவர்களை தடுத்தார். இத னால் பொதுமக்கள் சிலருக்கும், அர்ஜு னுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அர்ஜுனன் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி விரட்டி யுள்ளார். இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனையறிந்த சேலம் அரசு மருத்துவ மனை டீன் திருமால் பாபு, பொது மக்களை விரட்டிய அர்ஜுனன் மீது நடவடிக்கை எடுக்க பத்மாவதி தனியார் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து காவலர் அர்ஜுனனை பத்மாவதி தனி யார் நிறுவனம் பணி நீக்கம் செய்து உத்தர விட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களை விரட்டிய காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த நோயாளி களும், உறவினர்களையும் மகிழ்ச்சி அடைந் தனர்.