திருப்பூர், ஏப். 24 - ஒரு நல்ல இலக்கியம் என்பது நமது மனதைக் குலைக்கக்கூடியதாக இருக்கும். முன்பிருந்தது போல் நம்மால் இருக்க முடியா மல் செய்யும் என்று எழுத்தாளர் பவா.செல்ல துரை கூறினார். திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நி லைப் பள்ளியில் திருப்பூர் தமிழ்ச்சங்கம், இந் திய மருத்துவர் சங்கக் கிளை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ச்சங்க செயலாளர் மோகன் கே. கார்த்திக் வரவேற்றார். அதன் தலைவர் ஆ. முருகநாதன் தலைமை ஏற்றார். இந்நிகழ்வில் எழுத்தாளர், கதை சொல்லி பவா.செல்ல துரை பங்கேற்று தமிழ்ப்புத்தாண்டு சிறப் புரை ஆற்றினார். அப்போது அவர் கூறிய தாவது: எந்தவொரு இலக்கியம், இலக்கிய நிகழ் வும் தொடங்கும்போது இருக்கும் நிலையி லேயே, உங்களை முடியும்போதும் உணரச் செய்யுமானால் அதனால் எந்த பயனும் இல்லை. நம்மை மாற்றி அமைக்கக் கூடிய, நம் மனநிலையை தொந்தரவு செய்யக்கூ டியதாக நல்ல இலக்கியங்கள் இருக்கும். ஒரு எழுத்தாளனின் கம்பீரத்தை வேறு யாராலும் பெற்று விட முடியாது.
ஒரு கதை என்பது வெறுமனே கடந்து போகக்கூடிய தல்ல, அந்த கதையின் வழியாக ஒரு கலாச் சாரம் கடத்தப்படுகிறது. இலங்கைக்கு, ஈழத் திற்குச் செல்ல வேண்டும் என்பது எனது வாழ்க்கை கனவாக இருந்தது. அண்மையில் அங்கு சென்றிருந்தேன். ஈழத்தின் அரசியல், அங்கு செயல்பட்ட விடுதலைப் புலிகள் சரியா, தவறா என்பதைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. அங்கு நடைபெற்ற நிகழ்வில் 1500 பேர் பங் கேற்றனர். அங்கு கனடாவில் வசிக்கும் எழுத் தாளர் அ.முத்துலிங்கத்தின் கதையை நான் அவர்களுக்குச் சொன்னேன். புலம் பெயர்ந்து சென்று நல்ல நிலையில் வசதியாக வாழும் ஒரு தம்பதி, காணாமல் போன தங்கள் பிள்ளையை கண்டுபிடிப்பதும், அந்த மக னின் மனநிலை பற்றியதாகவும் அந்த கதை இருந்தது. அந்த கதையைச் சொல்லி முடித்து நான் அரங்கை விட்டு வெளியேறியபோது, இருளில் என்னை ஏராளமான கைகள் தழு வின, கை குலுக்கின. அவர்கள் எல்லாம் முன் னாள் விடுதலைப் புலிகள்.
அவர்கள் இப் போது அதே எழுச்சி உணர்வு நிலையில் இருக் கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை மனதிற்குள் அப்படி இருக்கலாம். ஆனால் நான் சொன்ன கதையோடு அங்கிருந் தவர்கள் உணர்வு நிலையில் கலந்து போனார் கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைப் பாடாக, தங்கள் நிலையாக அந்த கதையை உணர்ந்தனர். அதுதான் இலக்கி யம் செய்யக் கூடியது. இவ்வாறு பவா.செல்ல துரை பேசினார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிர வீன்குமார் அபிநபு கலந்து கொண்டு தமிழின் சிறப்புகளை குறிப்பிட்டுப் பேசினார். முன் னாள் தமிழ்ச்சங்கச் செயலாளர் ஆடிட்டர் லோகநாதன் நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அரிமா மு.ஜீவானந் தம், டாக்டர் நா.சரோஜா ஆகியோர் நினை வஞ்சலி உரையாற்றினர். இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்ச்சங்கப் பொரு ளாளர் லயன் கே.முருகேசன் நன்றி கூறி னார்.