districts

img

பூங்காவுக்குள் கொட்டப்பட்ட குப்பைகள்: மக்கள் புகார்

சேலம், ஜன.7- அயோத்தியபட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பூங் காக்குள் குப்பைகளை கொட்டி, எரிப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் குடியி ருப்புவாசிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக புகார்  எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பேரூ ராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில்  உள்ள வளம் பூங்கா அமைக்கப்பட்டு, பனைமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள்  வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பேரூராட்சி பகுதிகளில்  சேகரமாகும் குப்பைகளை அப்பகுதியில் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், எழும் புகை அருகே உள்ள அயோத்திய பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்குள்  செல்வதால், மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும், அப்பகுதியில்  வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு  நோய்த்தொற்று ஏற்படுவதாலும், அழகாக  பராமரிக்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட  பனைமரங்கள் அழிந்துள்ளது. எனவே, இப்பகுதியில் மீதமுள்ள பனை மரங்களை காக்கும் வகையிலும், பொதுமக்களை மூச்சுத்திணறலிலிருந்து விடுவிக்கும் வகையிலும் பேரூராட்சி நிர் வாகம் இப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.