districts

கடலோர படைக்கு புதிய தலைவர்

 புதுதில்லி,ஜூன் 30- இந்திய கடலோரக் காவல்படையின் புதிய தலைவராக கே.நடராஜன் பொறுப்பேற்றுக்கொண் டார். கடலோரக் காவல் படை  தலைவராக இருந்த ராஜேந்திர சிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைவராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டார். ஞாயி றன்று பொறுப்பேற்றுக் கொண்ட நடராஜனிடம், ராஜேந்திர சிங் பொறுப்பு களை ஒப்படைத்தார். இதை யடுத்து வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். 1984-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த கிருஷ்ண சாமி நடராஜன் பாது காப்புத்துறை தொடர்பான படிப்பில் சென்னை பல் கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.